சாய்பாபாவின் மற்றொரு வியத்தகு லீலை

அமராவதியை சேர்ந்த சாய்பாபாவின் பரம பக்தர் தாதாஸா ஹேப் காபர்டேயின் மனைவி ஷீரடியில் தன் இளம் புதல்வனுடன் சில நாட்கள் தங்கியிருந்தாள். அப்போது அவள் புதல்வனுக்கு அதிக காய்ச்சல் வந்தது. அது நெறிகட்டி பிளேக்காகப் பெரிதானது. தாயார் பயந்து போய் மிகவும் வேதனை அடைந்தாள் . பின்பு ,

சாய்பாபாவின் மற்றொரு வியத்தகு லீலை
X

அமராவதியை சேர்ந்த சாய்பாபாவின் பரம பக்தர் தாதாஸா ஹேப் காபர்டேயின் மனைவி ஷீரடியில் தன் இளம் புதல்வனுடன் சில நாட்கள் தங்கியிருந்தாள். அப்போது அவள் புதல்வனுக்கு அதிக காய்ச்சல் வந்தது. அது நெறிகட்டி பிளேக்காகப் பெரிதானது. தாயார் பயந்து போய் மிகவும் வேதனை அடைந்தாள் . பின்பு , அமராவதிக்குச் செல்ல நினைத்து, சாய்பாபா வழக்கமாக மாலையில் சுற்றி வரும் போது அவர் சமாதிக்கு அருகில் வந்து கொண்டிருக்கையில் அவருடைய அனுமதிப் பெறுவதற்காகப் பக்கத்தில் சென்று நடுங்கும் குரலில் தனு இளம் புத்திரன் பிளேக்கால் பிணைக்கப்பட்டிருப்பதை அவள் அறிவித்தாள்.

சாய்பாபாவின் மற்றொரு வியத்தகு லீலை

சாய்பாபா அவளிடம் “ அன்பாகவும், மிருதுவாகவும், வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. அவைகள் உருகி ஓடிவிடும், எல்லாம் எளிதாகவும், தூயதாகவும், ஆகிவிடும், என்றெ கூறினார்”, இவ்வாறு கூறி கொண்டே தமது கம்பளி உடையை இடுப்பு வரை தூக்கி அங்கு பிரசன்னமாயிருந்த அனைவருக்கும் நன்றாகப் பெரிதாக முட்டை அளவிற்குத் தோன்றியிருந்த பிளேக் கட்டிகளைக் காண்பித்து “பாருங்கள் , எனது அடியவர்களுக்காக நான் கஷ்டபட வேண்டிருக்கிறது. அவர்களது கஷ்டங்களெல்லாம், எனதேயாகும் என்றார்".

இந்த சிறப்பான அசாதாரண செயலை மக்கள் கண்ணுற்று ஞானிகள், தங்கள் அடிவர்களின், துன்பங்களை தாங்குறார்கள் என்று உறுதியடைந்தனர். ஞானிகளின் உள்ளமோ, மெழுகைவிட மிருதுவானது. உள்ளும், புறமும், அது வெண்ணையைப் போன்று மிருதுவாக, இருக்கிறது. எவ்வித இலாபமும், பெறும் நோக்கமின்றியே அவர்கள் தங்கள் அடியவர்களை நேசிக்கிறார்கள். அவர்களை உண்மை உறவினராயும் எண்ணுகின்றனர். இது சாய்பாபாவின் மற்றொரு வியத்தகு லீலை.

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்.

newstm.in

Tags:
Next Story
Share it