அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்

பாறையில் தேவியின் யோனி பகுதியைச் செய்து அதையே தெய்வமாக வழிபடுகிறார்கள். இந்தப் பாறையில் இருந்து எப்போதும் நீர் கசிந்துகொண்டேயிருக்கிறது.

அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்
X

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோவிலுக்கு செல்வது பாவம் என்று சொல்கிறோம். ஆனால் அம்மனுக்கு மாதந்தோறும், மாதவிலக்கு உண்டாகி சிவப்பு வஸ்திரத்தால் நான்கு நாட்கள் சக்தி பீடத்தை மறைத்துவிடுகிறார்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் தென்கரையில் உள்ள கெளஹாத்தி நகரிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது நீல் பர்வதம் என்னும் மலை. இம்மலையின் மீது இயற்கை அழகு சூழ வனப்பகுதியில் அமைந்திருக்கிறது காமாக்யா கோவில். புராதானமிக்க சக்தி வாய்ந்த கோவிலாக இது கருதப்படுகிறது.

சக்தி பீடங்கள் 51 ல் முதன்மையான முக்கியமான தலம் இது. சிவனை அவமதித்து தட்சண் செய்யும் யாகத்தைத் தட்டிகேட்கும் தாட்சாயிணி அங்கு மரியாதை குறைவாக நடத்தப்படவே அவள் அங்கிருக்கும் தீயில் விழுகிறாள். சிவபெருமான் வீரபத்திரதை அனுப்பி யாகத்தை நிறுத்துவ தோடு தட்சணின் தலையையும் கொய்த செய்கிறார்.

தீயில் விழுந்த தாட்சாயிணியை தோளில் போட்டுக் கொண்டு ருத்ரத் தாண்டவம் ஆடிய சிவபெருமானின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு, தனது சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை கூறுபோட தாட்சாயிணி உடல் 51 துண்டுகளாக சிதறி பூமியில் விழுகிறது. தேவியின் பாகங்கள் விழுந்த இடங்களே சக்திபீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தாட்சாயணியின் பாகங்களில் யோனி பகுதி விழுந்த இடம் இந்த மலைப்பகுதிதான்என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. தரையிலிருந்து700 அடி உயரத்தில் காமாக்யா தேவி வீற்றிருக்கிறாள். இம்மலை நீலாச்சல் என்றழைக்கப்படுகிறது. இத்தலம் காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தா னம், நீலாச்சலம், நீல் பர்வதம், காமகிரி, பிரக்ஜோதிஷபுரம், காமரூபம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

கர்ப்பகிரகத்தில் இருக்கும் சக்தி தேவியை காமேஸ்வரி, காமரூபிணி, காம, காமாக்ய என்றெல்லாம் அழைக்கிறார்கள். நீலாச்சல் மலையில் மகா வித்யாக்கள் என்றழைக்கப்படும் பத்து தேவிகளின் சந்நிதிகள் இருக்கின்றன. மூன்று தேவிகள் காமாக்யா கோவிலுக்கு உள்ளேயே அருள் பாலிக் கிறார்கள்.

இக்கோவிலில் கர்ப்ப கிரகத்தில் தெய்வ விக்கிரகம் இல்லை. பாறையில் தேவியின் யோனி பகுதியைச் செய்து அதையே தெய்வமாக வழிபடுகி றார்கள். இந்தப் பாறையில் இருந்து எப்போதும் நீர் கசிந்துகொண்டேயிருக்கிறது.இந்த கர்ப்பக்கிரகமானது தரைமட்டத்துக்கு கீழே சிறிய குகை அறையாக இயற்கையாக அமைந்திருக்கிறது. இங்கு செல்ல மூன்று செங்குத்தான படிகளைத் தாண்டி வெளிச்சம் குறைந்த கருவறையை அடைந்தால் இரண்டு பெரிய அகல் விளக்கின் நடுவில் யோனியைத் தரிசிக்கலாம்.

அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்

சிவப்புத் துணியாலும், செம்பருத்தி பூவாலும் அலங்கரிப்பட்டிருக்கும் யோனியைத் தரிசித்து அங்கு ஊற்றாக பெருகும் தீர்த்தத்தை அள்ளி நம் தலையில் தெளித்துக் கொண்டால் தீராத பிணிகள் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. இங்கு பிரசாதமாக ஒரு வகை கற்களைப் பொடி செய்து செந் தூரப் பொடியை பிரசாதமாக தருகிறார்கள். அம்பிகையின் மீது போத்தப்பட்ட ஈரத்துணி பிர சாதமாக கிடைத்தால் அதிர்ஷ்டம் என்று நினைக்கி றார்கள் பக்தர்கள். இதற்கு அம்புபச்சி வஸ்திரம் என்று பெயர். இங்கு ஆட்டை உயிர்பலி இடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தின் சிறப்பு அம்புபச்சி மேளா என்னும் திருவிழாதான். நான்கு நாட்கள் இவ்விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். மாதந்தோறும் அம்பிகைக்கும் உண்டாகும் மாத விலக்கு நாள்களின் போது சிவப்பு வஸ்திரத்தால் கர்ப்பகிரகத்தை திரையிட்டு மூடிவிடுவார்கள்.தமிழ் மாதமான ஆனி மாதத்தில் காமாக்யாவுக்கு ஏற்படும் மாதவிலக்கு நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.

அன்றைய தினம் இலட்சக்கணக்கான பக்தர்கள் காமாக்யா தேவியை வழிபடுகிறார்கள். கும்பமேளாவில் நீராடிய பலனை காமாக்யா தேவியின் யோனி பீடம் அன்றைய தினம் தருவதாக ஐதிகம். எனவே நிர்வாண சாகா சாதுக்களும், அகோரிகளும் அம்புபச்சி மேளாவில் கலந்து கொண்டு அம்பிகையின் அருளை பெறுகிறார்கள்.

பாறையில் சுரக்கும் நீர் மாதவிலக்கு காலங்களில் மட்டும் சிவப்பு நிறமாக வருகிறது. இந்த தேவியை வேண்டினால் மனதில் நினைத்த காரியங் கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குழந்தைப்பேறு, தடைப்பட்ட திருமணம், பில்லி சூனிய ஏவலிலிருந்து விடுதலை என்று முக்கிய வேண்டு தல்கள் எல்லாவற்றையும் மனமுவந்து நிறைவேற்றித்தருகிறாள் காமாக்யா தேவி.

வாழ்நாளில் ஒருமுறையாவது காமாக்யாவை தரிசிக்கும் பேறை பெறுங்கள். பெரும் பேறோடு வாழ்வீர்கள்.

newstm.in


newstm.in

Next Story
Share it