Logo

எப்போதும் சந்தேகம்... யாரைக் கண்டாலும் சந்தேகம்..

எப்போதும் சந்தேகம்... யாரைக் கண்டாலும் சந்தேகம்.. என்று தான் வாழ்க்கையைப் போராட்டத்தோடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.
 | 

எப்போதும் சந்தேகம்... யாரைக் கண்டாலும் சந்தேகம்..

மனிதர்கள் ஒரே மாதிரியான வடிவத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோருடைய மனமும் ஒன்று போல் சிந்திப்பதில்லை. எப்போதும் சந்தேகம்... யாரைக் கண்டாலும் சந்தேகம்..  என்று தான் வாழ்க்கையைப் போராட்டத்தோடு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.

தர்மபுரம் என்னும் ஊரில் கோவிந்தன் என்பவன் இருந்தான். அந்த ஊரில் எல்லோருமே அதர்மம் வழியிலேயே வாழ்ந்து வந்தார்கள். கோவிந்தனும் இதற்கு விதிவிலக்கல்ல.. அந்த ஊரில் இன்னொரு சிறப்பு இருந்தது. பறவைகளும், பூச்சிகளும் பேசும் சக்தியைக் கொண்டிருந்தது... காகம் பசியெடுத்தாலும்,  பாம்புக்கு இரை வேண்டுமானாலும் கேட்டு பெற்றுக்கொள்ளும் அளவில் சக்தி படைத்திருந்தது. ஆனால் கேட்டாலும் ஊரில் யாரும் கொடுக்கமாட்டார்கள் என்பது வேறு கதை.

ஊர்மக்கள் எல்லோரும் சோம்பேறிகள் தான். பக்கத்து ஊர்களுக்கு சென்று வேண்டியதை ஏமாற்றி... பிழைப்பு நடத்தினார்கள்.  ஒருமுறை வெளியில் சென்று வீட்டுக்கு வந்த கோவிந்தனை பாம்பு ஒன்று வழிமறித்தது.. “என்ன வேண்டும் என்றான்...”   “வயதாகிவிட்டதால் இரை தேட முடியவில்லை... ஏதே னும் கொடேன்” என்று கேட்டது.  “என்னிடம் எதுவும் கிடையாது.. வேறு எங்காவது போ” என்று விரட்டினான்... பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றுவிட்டது. மறுநாள் காலையில் மீண்டும் அவன் முன்பு அதேவயதான பாம்பு தோன்றியது.

“நான்தான் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டேனே.. மீண்டும் எதற்கு வந்தாய்” என்று கேட்டான்.. 
பாம்பு வாயை திறந்து காட்டியது.. பாம்பின் தாடைக்குள் நீளமான முள் ஒன்று நேர்வாக்கில் நின்றபடி இருந்தது..  உணவு கொடுக்க முடியவில்லையென்றாலும் பரவாயில்லை இந்தத் துயரிலிருந்து என்னை காப்பாற்றவாது செய்யேன் என்றபடி பரிதாபமாக பார்த்தது.

அவன் அருகில் வந்தான். கடித்துவிடுமோ என்ற சந்தேகம் இருந்தாலும் மனதின் ஓரத்தில் அதன் துன்பத்தைப் போக்கவேண்டும் என்னும் ஆவல் எழவே  மெதுவாக கை விரலை உள்ளே விட்டு  நீளமான முள்ளை வெளியே தள்ளினான்.  பாம்பு அவன் வீட்டைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து மறைந்து சென்றது.  எதற்காக வீட்டைச் சுற்றி வந்தது. ஒருவேளை உணவு தரவில்லை என்று சாபம் விட்டதோ என்றெல்லாம்  எண்ணி கோபமடைந்தான். மறுநாள் அந்தப் பாம்பை தேடிச்சென்று வழி மறித்தான். 

“உனக்கு எவ்வளவு தைரியம்? நான்  உன்னை காப்பாற்றினேன் ஆனால் நீ வீட்டைச் சுற்றி வலம் வந்து சாபம் விட்டாயே என்றான்.. பாம்பு மெதுவாக பேசியது.. “மூடனே.. இந்த ஊரில்  எல்லோரும் பாவம் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எமன் எங்கள் ரூபத்தில் தான் வரப்போகிறான். ஆனால்  நீ என்னை துன்பத்திலிருந்து காப்பாற்றியதால் உன் குடும்பத்துக்கும் என்னால் பாவ விமோசனம் கிடைத்துவிட்டது.

அதை உறுதி செய்யவே மூன்று முறை வலம் வந்தேன்...உதவி செய்தாலும் உன் சந்தேக புத்தி மட்டும் மாறவேயில்லையே..   இறைவனே உங்கள் முன் வந்தாலும் சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பீர்கள்..” என்றபடி  சென்றது...

இன்னும் சில நாள்கள் இங்கிருந்தால் குடும்பத்தோடு பரலோகம் போக வேண்டியதுதான். அதிலும் நரகத்துக்கு என்றபடி குடும்பத்தை காலிசெய்து பக்கத்து ஊருக்கு சென்றான் உழைத்து பிழைக்க வேண்டும் என்று.. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP