Logo

ஆடி அமாவாசை: புண்ணிய நதிகளில் நீராடி  பித்ருக்களை வழிபடுவது ஏன்?

மகாபாரதத்தில் அர்ச்சுனன் 12 ஆண்டுகாலம் தீர்த்த யாத்திரையின் போது பரத கண்டத்தில் உள்ள அனைத்து புனித நீர் நிலைகளில் நீராடி தன்னு டைய பாவத்தைப் போக்கிகொண்டான் என்று சபா பருவத்தில் ..
 | 

ஆடி அமாவாசை: புண்ணிய நதிகளில் நீராடி  பித்ருக்களை வழிபடுவது ஏன்?

ஆடி மாதம் அம்மனுக்கு உரியது. அதனால் அம்மனின் அருளைபெற மாதம் முழுவதும் வழிபடுகிறோம். அதே நேரம் ஆடிமாதம் நமது மூதாதையர்கள் பித்ருக்களுக்கும் உரிய மாதம். முன்னோர்களது பூரண ஆசியைப் பெறும் நாள். நாளை (31.07.2019- புதன்கிழமை) ஆடி அமாவாசை.

வருடத்தில் வரும், 12 அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை என மூன்று அமாவாசைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தட்சணாயன காலத்தின் தொடக்கம் என்று அழைக்கப்படும் ஆடி அமாவாசை அன்று சூரியபகவான் தெற்கு நோக்கி பயணிக்கிறார். இக்காலம் முடிந்து உத்தராயன காலத்தில் வடக்கு நோக்கி சஞ்சரிக்கிறார். அப்போது  வரும் தை அமாவாசையும் விசேஷமாக கொண்டாடப்படு கிறது.

ஒரே ராசியில் சந்திரனும், சூரியனும் ஒன்று சேரும் நாள் அமாவாசை. ஜோதிட சாஸ்திரத்தின் படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும், சந்தி ரனும் இணையும் நாள் ஆடி அமாவாசை என்றும், தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும், சந்திரனும் இணையும் நாள் தை அமாவாசை என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நாள்களில் நீர் நிலைகளில் மாற்றம் உண்டாவதாக  ஆன்மிகமும், அதை அறிவியலும் நிரூபிக்கிறது. இந்நாளில் கடலில் வாழும் ஜீவராசிகள் புத்துயிர் பெறுகின்றன. கடலில் ஓர் புதிய சக்தி உண்டாகிறது.

கங்கை, யமுனை, சரஸ்வதி, திரிவேணி சங்கமம், சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி போன்ற ஆறுகளிலும் இராமேஸ்வரம், துவாரகை போன்ற ஆலயங்களில் அருகே அமைந்துள்ள நீர்நிலைகளிலும் நீராட வேண்டும். இதுவே தீர்த்த யாத்திரை என்று சொல்லப்படுகிறது. இத்தகைய புனித நீராடுதல் அறிந்தும், அறியாமலும் நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் என்பதையும், இந்துக்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

இத்தகைய பெருமைமிக்க நீர் நிலைகளில் பித்ருக்களுக்கு வழிபாடு செய்தால், அவர்களது ஆன்மா சாந்தமடையும் என்பது ஐதிகம். அமாவாசை அன்று செய்யப்படும் இத்தகைய வழிபடுதலுக்கு சக்தி அதிகம் என்பதோடு, சிறப்பு வாய்ந்த அமாவாசைகளுக்கு அதிக பலனும் உண்டு. இந்து தர் மத்தில் இது பிதுர் தர்ப்பணம் என்று அழைக்கப்படுகிறது.

மகாபாரதத்தில் அர்ச்சுனன் 12 ஆண்டுகாலம் தீர்த்த யாத்திரையின் போது, பரத கண்டத்தில் உள்ள அனைத்து புனித நீர் நிலைகளில் நீராடி தன்னுடைய பாவத்தைப் போக்கிகொண்டான் என்று, சபா பருவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புண்ணிய நதிகளில் நீராடி பித்ரு பூஜைகள் செய்தால் பித்ருக்கள் மனம் மகிழ்ந்து ஆசிர்வாதம் அளிப்பார்கள்.

பித்ருக்களின் தாகம் தீர்க்க ஆடி அமாவாசையான நாளை அதிகாலையிலேயே  புண்ணிய நதிகளுக்கு சென்று எள் தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீர்ப்போம். இயலாதவர்களுக்கு உதவி செய்து முன்னோர்களை வழிபடுவோம். முன்னோர்களின் ஆசியும், இறைவனின் அருளும் நிறைவாய் பெற, நாளை புண்ணிய நதிகளில் அவசியம் நீராடுங்கள்.   


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP