சாய்பாபாவின் பக்தா்கள் பற்றிய சிறு முன்னுரை

பக்தர்களின் கூட்டம் சாய்பாபாவின் முன்பு எப்பொழுதும் அலையடிக்கும் முண்டியடிக்கும். அவரின் அற்புதங்களைக் கண்டு ஆச்சர்யம் பொங்கும். தங்கள் வாழ்வின் துயர்தீர அவரை வணங்கித் தொழும். அனைத்து வளங்களும் கிடைக்க அவரைப் போற்றிப் புகழும். பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்விக்கும்.

சாய்பாபாவின் பக்தா்கள் பற்றிய சிறு முன்னுரை
X

பக்தர்களின் கூட்டம் சாய்பாபாவின் முன்பு எப்பொழுதும் அலையடிக்கும் முண்டியடிக்கும். அவரின் அற்புதங்களைக் கண்டு ஆச்சர்யம் பொங்கும். தங்கள் வாழ்வின் துயர்தீர அவரை வணங்கித் தொழும். அனைத்து வளங்களும் கிடைக்க அவரைப் போற்றிப் புகழும். பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்விக்கும்.

'சாய்பாபா... சாய்பாபா' என்று பித்துப் பிடித்தது போல் அந்தச் சித்தரின் பெயரையே உச்சரித்து மகிழும் பக்தர்கள்.
அவர்களுக்கு எல்லாமே சாய்பாபா தான்!

சிவ பக்தர்கள், சாய்பாபாவைப் பார்க்கும் போது சிவனைக் கண்டார்கள் . கண்கள் பனிக்க ஆச்சர்ய வியப்பில் அப்படியே அடிதொழுது வணங்கினார்கள். ஹரியைப் பூஜிப்பவர்கள் ஷீரடியில் சாய்பாபாவைப் பார்க்க வந்தும், ஹரியையே கண்டு உணர்ந்தார்கள் . உடல் புல்லரிக்க லயித்து மகிழ்ந்தார்கள்.

அல்லாவையே தொழும் பக்தர்கள் அங்கே அல்லாவையே வணங்கிச் சென்றனர். இப்படி அத்தனை பக்தர்களுக்கும் அவர்கள் வணங்கும் ஆண்டவனின் ரூபத்திலேயே காட்சியளித்த மகான் சாய்பாபா.
காரணம் அவர் தான் இறைவன்!
உலகை ரட்சிப்பவன்!
எங்கும் நிறைத்தவன் !
தன் பாதம் தொழுதவர்களின் பாதம் வலிக்காது தாங்கும் சக்தி கொண்ட நல்லான் அவர் !

'எல்லாம் சாய்பாபா தான் என்று தன்மீது முழு நம்பிக்கையோடு வரும் பக்தர்களுக்குச் சற்றும் ஏமாற்றத்தை அளிக்காத உயர்ந்தவர் சாய்பாபா!
பிச்சை எடுத்துவந்த உணவைத் தான் உண்ணாமல் தன் பக்தர்களுக்கும் பறவைகளுக்கும் நாய்களுக்கும், பூனைகளுக்கும் அளித்த இன்புற்றவன் அந்த மகான்!
உயர்ந்தவன்! மனித உருவில் வந்த மகான்!
சட்டைப் பையில் இருக்கும் பக்தர்கள் அருளிய காசு,பணத்தை எல்லாம் பக்தர்களுக்கே அள்ளி வீசிய பெருந்தகையாளன் !
நோயுற்ற பக்தர்களுக்கு அதனைத் தீர்த்தருளியவன் அவன்!
சாய்பாபாவைப் பற்றி இவ்வாறு எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் .
அந்த அளவிற்குக் கருணை உள்ளம் கொண்டவர் அவர்.
இரக்கமும் அன்பும் கொண்டவர்! .
இதன் காரணமாக வே அவரைத் தேடி பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டனர். அவர் கூறுவதை வேதவாக்காகவே எடுத்து, தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர் . எத்தனை துயரங்கள் வந்த போதிலும் அதனை சாய்பாபாவால் மட்டுமே தீர்க்க முடியும் என்று மனதார நம்பினர் .
இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட பக்தர்களில் சாய்பாபாவுடனே இருந்து , சாய்பாபாவிற்கு அனைத்து பணிவிடைகளும் செய்து தங்கள் பாவம் போக்கிக் கொண்ட பக்தர்கள் சிலரும் உண்டு. அவர்கள் வாழ்வில் சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

அப்பேர்ப்பட்ட பக்தர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது நம்மை சாய்பாபாவின் பக்கம் மேலும் கொண்டு செல்லும் நல்வழியாக அமையும் என்பது உறுதி.

“மகல் சபதி”, “பையாஜி”, “ஷாமா தத்யா “என்று அவரின் நெருங்கிய தீவிர பக்தர்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.
அந்த மகானின் அருகில் இருந்து அவருக்கு வேண்டிய அனைத்துப் பணிகளையும் செய்து, அவரது துக்கத்திலும் ,துயரத்திலும் இன்பத்திலும் , மகிழ்ச்சியிலும் பங்கு கொள்ளும் பாக்கியம் பெற்ற இவர்களும் நம்மைப் பொறுத்த மட்டில் புனிதமானவர்களே . புண்ணியம் செய்தவர்களே
சாய்பாபாவிற்கு பணிவிடை செய்யும் பேறு கிடைக்கப் பெற்றது அவர்களுக்குக் கிடைத்த வரம். அவர்கள் செய்த யோகம். பூர்வ புண்ணியம் .
அவர்களைப் பற்றிப் படிப்பது, தெரிந்து கொள்வது என்பது நமக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பு. அரிய சந்தர்ப்பம். நாம் செய்த பாக்யம். இதனை புரிந்து, உணர்ந்து மேலே தொடர்ந்தால் உங்கள் பாவங்கள் மறைந்து புண்ணியங்கள் பெருக வாய்ப்புகள் அதிகம்.

காரணம், சாய்பாபாவின் அருள் பார்வை இங்கே கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகம் இனி வரும் நாட்களில், சாய்பாபாவின் நெருங்கிய, தீவிர பக்தர்களும், அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அதிசயங்ளையும், நிகழ்வுகளையும் காணலாம்.

சாய்பாபாவின் பக்தா்கள் பற்றிய சிறு முன்னுரை
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

Newstm.in

newstm.in

Next Story
Share it