கருங்கல்லில் தெய்வ சிலைகளை வடிப்பது ஏன்?

கருங்கல்லில் தெய்வ சிலைகளை வடிப்பது ஏன்?

கருங்கல்லில் தெய்வ சிலைகளை வடிப்பது ஏன்?
X

உலோகத்தால் செய்யப்படும் விக்கிரங்கங்களின் ஆற்றலை விட கருங்கல்லால் செய்யப்படும் விக்கிரங்கங்களின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. கருங்கல் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை உடையது. கருங்கல்லில் நிலம், நீர்,
காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.

1

நிலம்
பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான் கல்லில் கூட செடி கொடிகள் வளர்கின்றன.

நீர்
கல்லில் நீர் உள்ளது. எனவே தான் கல் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீருற்று இருப்பதை காணலாம். எவ்வளவு வெயில் அடித்தாலும் கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில் மண்டபங்களில் குளிர்ச்சியே நிலவும். இதை நீங்கள் கோவில்களில் கண்கூடாக காணலாம்.

காற்று
கல்லில் காற்றும் உண்டு. எனவே தான் கல்லில் தேரை போன்ற உயிரினங்கள் கூட உயிர் வாழ்கிறது.

நெருப்பு
கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே அதுவே சான்று. ஆதிமனிதன் கற்களை உரசியே நெருப்பை உருவாக்கினான்.

1

ஆகாயம்
ஆகாயத்தைப் போலவே, வெளியிலிருக்கும் சத்தத்தை தனக்குள் ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலியாக எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.

இக்காரணங்களினால் தான், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.
ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி, யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக வடித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓரு சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக உணரலாம்.

அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் நல்ல அதிர்வு தன்மை அதிகரிக்கின்றது. நாமும் அக்கோவிலில் வணங்கும்போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.

இதனால் தான் நம் முன்னோர்கள் தெய்வ உருவங்களை கருங்கல் சிலைகள் கொண்டு உருவாக்கினார்கள்.

Next Story
Share it