மற்ற சிவராத்திரி விரதங்களின் பலன்களை எல்லாம் ஒரு சேர வழங்குவதால் இது "மஹாசிவராத்திரி" ..!!

மற்ற சிவராத்திரி விரதங்களின் பலன்களை எல்லாம் ஒரு சேர வழங்குவதால் இது "மஹாசிவராத்திரி" ..!!

மற்ற சிவராத்திரி விரதங்களின் பலன்களை எல்லாம் ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி ..!!
X

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

பொருள்:

நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.

கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.

திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.

தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.

ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

“சிவாயநம எனச் சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை” என்றார் ஔவை.

ஒவ்வவொரு மாதமு‌ம் தே‌ய்‌பிறை‌யி‌ல் வரு‌ம் ‌சது‌ர்‌த்த‌சி நா‌ள் ‌சிவரா‌த்‌தி‌ரி என்று கொ‌ண்டாட‌ப்படு‌கிறது. ஆனால் அதுவே மா‌சி மாத‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நா‌ள் மகா ‌சிவரா‌த்‌தி‌ரி என்வற ‌சிற‌ப்‌பை பெறுகிறது.மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே உன்னதமானது. மற்ற சிவராத்திரி விரதங்களின் பலன்களை எல்லாம் ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று சைவ பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும்.

திதிகளில் இறுதி திதியானசதுர்த்தசி திதி ஈஸ்வரனுக்குரியது. மும்மூர்த்திகளில் சிவன்சம்ஹார மூர்த்தி.இந்த உலகில் தோன்றிய அனைத்து ஈசனின் பாதாரவிந்தகளையே அடைகிறது. அதனால் இறுதி இறுதி திதியை அவருக்கு உரியது என்பது முற்றிலும் பொருந்தும்.

சிவராத்திரி பற்றிய புராணக்கதைகள்

பிரளய காலத்தில், உலகம் அழிந்த போது, மீண்டும் உலகம் உயிர்பெற அன்னை உமாதேவி சிவபெருமானை வேண்டித் தவமிருந்த இரவே சிவராத்திரி என்கிறார்கள் ஆன்மீக சான்றோர்கள்.

பார்வதி தேவி விளையாட்டாக ஈசனின் கண்களை மூட,உலகமே இருளில் மூழ்கியது. இதனால் பயந்த தேவர்கள் அந்த இரவு முழுவதும் இறைவனை வேண்டி வணங்கி, மீண்டும் உலகிற்கு ஒளி கிடைக்கச் செய்த இரவே சிவராத்திரி என்று சொல்வாரும் உண்டு.

ஒரு முறை ஒரு வேடன்ஒருவன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் அவன் கெட்ட நேரம்,அன்று ஒரு விலங்கும் அகப்படவில்லை. பொழுதும்போய், நன்றாக இருட்ட தொடங்கியதும், ஒரு மரத்தின் மீதேறி அமர்ந்தான் வேடன். பயத்தினால் தூக்கம் வராமல், அன்று இரவு முழுவதும் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்ட வண்ணம் இருந்தான். அந்த இலைகள் அந்த மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அவன் முன் பிறவியில் செய்த புண்ணியம் அது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் ஒரு மகாசிவராத்திரி தினமாகும். மகாசிவராத்திரி தினத்தில் அவனை அறியாமலே சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளை பறித்துப் போட்டதால், வேடனுக்கு மோட்சம் கிடைத்ததாக ஒரு புராண கதை உண்டு.

சிவராத்திரி விரத மகிமைகள்

ஆதிசேஷன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற,ஒரு சிவராத்திரி நன்னாளில் முதல் சாமத்தில் திருக்குடந்தையில் உள்ள திரு நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேசுவரத்தில் குடிக்கொண்டு அருள்பாலிக்கும் நாக நாத சுவாமியையும், மூன்றாம் சாமத்தில் சேஷபுரி என அழைக்கப்படும் திருப்பாம்புரத்தில் கொலுவீற்றிருக்கும் பாம்பீசுவரரையும், நான்காம் சாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் வணங்கினான். கருணைக்கடலான ஈசனும் மனம் இரங்கி ஆதிசேஷனுக்கு அவன் இழந்த வீரியத்தை வழங்கி அருளினார். சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்பவர்கள் தீராத வியாதிகள் நீங்கப் பெற்று, சுகமாக வாழ்வர் என்றும் சர்ப்ப தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

“திரிதளம் திரிகுணாகாரம்

த்ரி நேத்ரம்ச த்ரியாயுதம்

த்ரி ஜன்ம பாப சம்ஹாரம்

ஏக வில்வம் சிவார்ப்பணம்’’

எனும் சக்தி வாய்ந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வில்வ இலை கொண்டு அப்பனை பூஜித்து அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக.

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

Next Story
Share it