மஹா சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்போம்..!! சிவனின் அருளை பெறுவோம்

மஹா சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்போம்..!! சிவனின் அருளை பெறுவோம்

மஹா சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்போம்..!! சிவனின் அருளை பெறுவோம்
X

சிவனை வழிபடுபவர்களுக்கு உகந்த விரத நாள். விரதங்களுக்கெல்லாம் உயர்ந்த நாள். அண்டம் முழுவதையும் ஆளும் சிவனை, உலகில் உள்ள ஜீவராசிகள் மட்டு மல்ல, தேவலோகத்திலும், முனிவர்களும், ரிஷிகளும் திருமாலும் கூட இந்நாளின் மகிமையை உணர்ந்திருக்கிறார்கள்.

மஹா சிவராத்திரியன்று, அறியாமல் செய்த பூஜையினால், வேடன் ஒருவன், பெறுவதற்கரிய பேறை பெற்றான்.
அயோத்தியை தசரத மன்னன் ஆண்ட சமயம். வியாதன் என்ற வேடன் ஒருவன், வேட்டையாடுவதில் வல்லவன்.

துல்லியமாக குறிவைப்பதில் ஆற்றல் கொண்டவன். ஒரு நாள், வேட்டையாட சென்றவனுக்கு முயல் கூட கிடைக்காமல் வெகுநேரம் காத்திருந்தான். சூரியன் மறைந்து, இருள் சூழும் நேரம். இன்று வேட்டையாடாமல் வீடு செல்லக்கூடாது என்று காத்து கொண்டிருந்தவனுக்கு, நேரம் செல்ல செல்ல அச்சம் உண்டாயிற்று.

இரவு நேரங்களில் அபாயகரமான விலங்குகள் வந்தால், குறி பார்த்து வேட்டையாடவும் முடியாது. இந்நேரம் வீட்டுக்கும் போகமுடியாது என்ன செய்யலாம் என்று நினைத்தப்படி, வில்வ மரத்தின் கீழ் அமர்ந்தான். தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்ட அவன், மடியில் வைத்திருந்த நீர் குவளையோடு, மரத்தின் மீது அமர்ந்தான்.

அவன் மீது பாய வந்த புலி, அவன் கீழே இறங்குவானா என்று எதிர்நோக்கி காத்திருந்தது. புலியின் எதிர்பார்ப்பை அறிந்தவனாயிற்றே. காலை முதல் வேட்டையைத் தேடி அலைந்ததால் களைப்பில் தூக்கம் சொக்கியது.

ஒரு நேரமாக தூக்கம் சொக்க, மடியிலிருந்த நீர், சிவலிங்கத்தின் மீது சிந்தியது. தூக்கட்திலிருந்து விழிப்பு தட்ட வில்வ இலைகளை பறித்து கீழே போட்டான். இப்படியே இரவு முழுவதும் நான்கு ஜாமத்திலும் தூக்கம் சொக்கும்போதெல்லாம் மடியிலிருந்த நீரும், வில்வ இலைகளும் லிங்கத்தின் மீது சிக்கி அர்ச்சனை செய்யப்பட்டது.

வேட்டையாடினாலும், அவன் கண் விழித்திருந்த அன்றைய தினம், மஹா சிவராத்திரி என்பதை அறியாமல், நான்கு ஜாமங்களும் வில்வ இலைகளால் அர்ச்சித்ததால், மனம்மகிழ்ந்த சிவப்பெருமான், அவன் முன் தோன்றினார்.

அறியாமல் நீ செய்த பூஜையை நான் மனமுவந்து ஏற்றேன். உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள் என்றார்.
தங்களை கண்ட வரத்தை விட மிகப்பெரிய வரம் ஏது சாமி... இனி நான் உயிர்களைக் கொல்லாமல் வாழுவேன் என்றான்.

ஸ்ரீ மந்நாராயணன், ஸ்ரீ இராமர் அவதாரம் எடுத்து, காட்டுக்கு வரும்போது அவரை சந்திப்பாய் என்று வரமளித்தார். அறியாமல் செய்தாலும் மஹா சிவராத்திரி பூஜையின் பலனால் குகனாக மாறி, ஸ்ரீ ராமனால், குகன் என்று அழைக்கப்பட்டான்.
பெரியதற்கரிய பேறை பெற மஹா சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்ப்போம்.

Next Story
Share it