கருப்புசாமி உங்கள் துன்பங்களை காணாமல் போகச்செய்வதில் வல்லமை மிக்கவர்..!!

கருப்புசாமி உங்கள் துன்பங்களை காணாமல் போகச்செய்வதில் வல்லமை மிக்கவர்..!!

கருப்புசாமி உங்கள் துன்பங்களை காணாமல் போகச்செய்வதில் வல்லமை மிக்கவர்..!!
X

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை போக்கி கொள் ளவும், மீளா துயரத்தில் சிக்கினாலும் அதிலிருந்து மீண்டு வரவும் முன் னோர்கள் கூறிய பரிகாரங்களை முறைப்படி செய்தால் எத்தகைய துன்பங் களும் பறந்துவிடும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.உலகில் மனித பிறவிகளுக்கு மட்டுமே துன்பத்தை நீக்கி கொள்ள பரிகாரம் உண்டு.

என்னவென்று அறியாமல் எப்பிறவியில் செய்த பாவமோ இப்பிறவியில் அனு பவிக்கிறேன் என்று கவலையில் உழாமல் வாழ்வில் துன்பங்களும், கவலை களும் மாறி மாறி வந்தாலும் சோர்ந்துவிடாமல் இறைவனை துணைக்கு அழைப்பவர்கள் நிச்சயம் மீண்டுவிடுவார்கள்.நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் படிப்படியாக குறைந்து மீண்டுவர கருப்பசாமியை அழையுங்கள்.

துன்பங்கள் தீர வெளியில் சென்று பரிகாரம் செய்ய வேண்டியதில்லை. ஒவ் வொரு சனிக்கிழமையும் அதிகாலை எழுந்து நீராடி வெள்ளைத்தாளில் கறுப்பு நிற மையால் உங்களுக்கு அதிகம் தொல்லை தரும் துன்பத்தை எழுதுங்கள். பிறகு வெள்ளைத்தாளை மடித்து சுருட்டி கறுப்பு நிற நூலால் முடிச்சிட்டு கருப்பசாமி உருவப்படத்தின் முன்பு வைத்து மனமுறுக பிரார்த்தனை செய் யுங்கள்.

உங்கள் பிரார்த்தனைகள் எது வேண்டுமானாலும் இருக்கலாம். அப்போதைய பணத்தட்டுப்பாட்டை நீக்க வேண்டியும்,. குழந்தைகள் கல்வி யில் தேர்ச்சி பெறவும், வேலையில் இருக்கும் மன அழுத்தம் குறையவும்,. நிரந்தர வேலை வேண்டியும், சொந்த வீடு வேண்டியும் என பெரிய பிரார்த் தனைகள் கூட இருக்கலாம்.

பூஜை முடித்ததும் முடிச்சிட்ட வெள்ளைத்தாளை எடுத்து கறுப்பு நிற மெழுகு வத்தியைப் பற்ற வைத்து, அந்த வெள்ளைத்தாளை கருப்புசாமியை நினைத் தப்படி மெழுகுவத்தி நெருப்பில் சுட்டு பொசுக்க வேண்டும். எரிந்து முடிந் ததும் எரிந்தவற்றை அள்ளி ஓடும் தண்ணீரில் விட வேண்டும். அப்படி இல்லையென்றால் கிணற்றில் கரைக்கலாம். அல்லது அவற்றை எடுத்து வெளியே செல்லும்போது ஓடும் நீர்நிலைகளில் வீசி விடலாம்.

பிரச்னைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும். சிறிது சிறிதாக தீர்ந்து வரு வதைக கண்கூடாக காணலாம். மிகப் பெரிய பிரச்னைகளாக இருந்தாலும் கூட தொடர்ந்து 15 வாரங்கள் (சனிக்கிழமைகளில்) செய்யும்போது பிரச்னைகள் இருந்த சுவடுகளே இல்லாமல் போகும்.

கருப்புசாமி துன்பங்களை காணாமல் போகச்செய்வதில் வல்லமை மிக்கவர் என்பதை இந்த எளிய பரிகாரம் உணர்த்தும்.

Next Story
Share it