நெற்றியில் விபூதி வைப்பதன் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா ?

நெற்றியில் விபூதி வைப்பதன் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா ?

நெற்றியில் விபூதி வைப்பதன் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா ?
X

கோயில்களில் இறைவனைத் தரிசித்ததும் விபூதி பிரசாதம் வாங்கும் போது இடதுகையை கீழே வைத்து வலதுகையை மேலே வைத்து வாங்குவோம். விபூதியை இடதுகையால் இடக்கூடாது என்பது சாஸ்திரமாக கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது. திருநீற்றை உச்சியிலும் நெற்றியிலும் எப்போதும் வைக்க வேண்டும். திருநீறைப்பூசும் போது இறைவனது திருநாமத்தைச் சொல்லியபடி பூச வேண்டும். ஒரு கையால் விபூதி பிரசாதம் வாங்கி மறுகையால் அதை இடுவதும் எஞ்சிய விபூதியை ஊதுவதும் இறைவனை அலட்சியப்படுத்துவது போலாகும் என்கிறது சாஸ்திரங்கள். திருநீறை இடும்போது தெய்வ சிந்தனைகள் மட்டுமே மேலொங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.

உலகில் எல்லோரும் இறுதிகாலத்தில் பிடி சாம்பலில் அடங்கிவிடுகிறார்கள். பேராசைக்கொள்ளும் வாழ்க்கை இறுதியில் சாம்பலில் முடிகிறதுஎன்பதை வலியுறுத்தவே திருநீறு அணிவதை பழக்கமாக்கியிருந்தார்கள் நம் முன்னோர் கள். திருநீறு நமது உடலை சுத்தப்படுத்தி ஆன்மாவையும் சுத்தப்படுத்தி இறை வனை அடைய உதவும் என்கிறார்கள்.

1

விஞ்ஞான ரீதியாக:

விபூதியை இரு புருவங்களுக்கு இடையில் வைக்கப்படும் போது மூளை நரம்புகள் தூண்டப்படுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. அதிர்வுகளை உள் வாங்கும் சக்தி விபூதிக்கு உண்டு என்கிறது விஞ்ஞானம். சிறந்த கிருமி நாசி னியாகவும், நெற்றியில் வடியும் வியர்வையை உறிஞ்சும் தன்மையாகவும் விபூதி செயல்படுவதாக கூறுகிறார்கள். இன்றும் கிராமங்களில் பிறந்த குழந்தைக்குத் தலைக்குக் குளிப்பாட்டியதும் உச்சந்தலையில் விபூதி வைப்பார்கள். தலையில் உள்ள ஈரத்தை விபூதியானது உறிஞ்சுக்கொள்ளும் என்பதை அன்றே கண்டறிந் தவர்கள் ஆன்மிகத்தோடு தொடர்பு படுத்தி கொண்டார்கள்.

எந்தவித ரசாயனமும் இல்லாமல் பசுவின் சாணத்தைக் கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் விபூதியில் பாதரச மூலக்கூறுகள் அதிகம் உண்டு. இவை நெற்றியில் வைப்பதால் நாம் சுவாசிக்கும் காற்று சுத்தப் படுத்தப்படுகிறது. நமது உடலில் ஏழு சக்கரங்கள் உண்டு. கண்ணுக்கு புலப்படாத இந்த சக்கரங்களை நாம் உணர மட்டுமே முடியும்.

இந்தச் சக்கரங்களின் சக்தியானது மேலும் உயரும் போது சக்தியானது அடுத்த சக்கரங்களுக்கு செல்கிறது. மோதிர விரலில் விபூதியைத் தொட்டு புருவ மத்தியிலும், தொண்டைக்குழியிலும், மார்பு கூட்டிலும் அணிந்தால் உள்வாங்கும் திறனும் அதிகரிக்கும் என்பதை முன்னோர்கள் அன்றே கடைப் பிடித்திருக்கிறார்கள் என்பதை ஆச்சரியத்தோடு பார்க்கிறது விஞ்ஞானம்.

Next Story
Share it