நாம் சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால்....!!

நாம் சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால்....!!

நாம் சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால்....!!
X

இந்துக்களால் கொண்டாடப்படக்கூடிய முக்கிய விரதம் மகா சிவராத்திரி. அன்றைய தினம் முழுவதும் விழித்திருந்து இறைவனுக்கு அபிஷேகம், அலங்கார, பூஜை ஆராதனை செய்ய வேண்டும்.

இந்த விரதம் ஆண்டுதோறும் மாசி மாத்தில் வரக்கூடிய தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து ‘மகா சிவராத்திரி கற்பம்’ என்ற சிறிய நூலில் விளக்கப்பட்டுள்ளது. நாம் சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் நீங்கி, நமக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

மாதம் ஒருமுறை மாத சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதியில் மகா சிவராத்திரி தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமாவது நாம் சுத்தபத்தமாகவும், உண்ணா விரதம் இருந்து சிவபெருமானுக்கு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜை செய்து வழிபடுவது நல்லது.

shiv

நாம் வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜை செய்ய முடியாவிட்டாலும், அருகில் உள்ள சிவன் ஆலயத்தில், அன்றைய தினம் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு, பூஜைக்குரிய பொருட்களை வாங்கித் தரலாம்.

மகா சிவராத்திரி அன்று நாள் முழுவதும் விரதமிருந்து, அன்றைய தினம் இரவில் தூங்காமல் கண் விழித்து சிவ பெருமானுக்கு நடக்கும் அபிஷேக, அலங்கார, பூஜை ஆராதனைகளைக் கண்டு பயனடையலாம்.

Next Story
Share it