இதை செய்தால் வீட்டில் பொன் பொருள் சேரும்..!! அடகுக்குப் போன தங்கத்தை மீட்கலாம்..!!

இதை செய்தால் வீட்டில் பொன் பொருள் சேரும்..!! அடகுக்குப் போன தங்கத்தை மீட்கலாம்..!!

இதை செய்தால் வீட்டில் பொன் பொருள் சேரும்..!! அடகுக்குப் போன தங்கத்தை மீட்கலாம்..!!
X

ஆபத்து காலத்தில் தங்கம் உதவும் என்பதற்காகவே பெண்கள் நகைகளை சேகரிக்க விரும்புகிறார்கள். இத்தகைய சிறப்புவாய்ந்த பொன்னை எப்படிப் பெருகச் செய்வது என்று ஒரு சிலரும் ஏற்கெனவே வாங்கியிருக்கும் கொஞ்சம் தங்கமும் அடகுக்குப் போகாமல் பாதுகாப்பது எப்படி என்று ஒரு சிலரும் அடகுக்குப் போன பொன்னை எப்படி மீட்பது என்றும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். தங்கம் வாங்க, சேர, நிலைத்திருக்க சில பரிகாரங்களை நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இதோ அவற்றுள் சில உங்களுக்காக...

முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் மூன்று. 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம் ஆகியவை. வார விரதம் என்பது செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டிப்பது, நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது, திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது. இந்த மூன்று விரதமும் பொன்னைப் பேருக்கும் மகா விரதங்கள் என்பர். மேலும் இந்த உலோகத்திற்கு உரிய தெய்வம் முருகப்பெருமான். முருகன் தலத்தல் சென்று வழிபட்டால் தங்கம் சேரும் என்பதும் நம்பிக்கை

குருபகவான் பொன்னன் என்றே போற்றபப்டுகிறார். குருவிற்கு பிடித்த உலோகம் தங்கம், குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம் பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறந்து குரு பலம் பெற்றவர்களுக்கு ஏராளமான தங்கம் சேரும் என்பது நம்பிக்கை.

வியாழக்கிழமை தோரும் குருபகவானை அவருக்குறிய ஸ்லோகங்களை சொல்லி அர்ச்சிக்க வேண்டும். தங்கத்திற்கு உரியவர்கள் குருவும் முருகனும் ஆகவே இவர்கள் இருவரின் சக்திகளை ஆகர்ஷணம் செய்து கொள்வது அவசியம். ஒரு பித்தளை சொம்பில் அரிசி கொண்டைக்கடலை துவரம் பருப்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து உள்ளே போட்டு ஒரு தேங்காயை எடுத்து அதன் மேல் வைத்து ஒரு நாள் வழிபட வேண்டும். பிறகு, அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று முருகன் காலடியில் வைத்து வேண்டிக் கொண்டு யாருக்கேனும் தானமாக கொடுத்து விட வேண்டும். அந்த நாள் மாலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொண்டை கடலை நெய்வேத்யத்தை வழங்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் தங்கத்தை ஈர்க்கும் ஆகர்ஷணம் வரும்.

Next Story
Share it