இப்படி கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா ?

இப்படி கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா ?

இப்படி கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா ?
X

நாம் காணும் கனவுகளுக்கு ஏற்றார் போல் சில பலன்கள் உள்ளன. எல்லா கனவுகளுக்கும் பலன்கள் இருப்பதில்லை. ஆனால் சில குறிப்பிட்ட கனவுகளுக்கு பலன்கள் உள்ளன.நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கனவுகள் வருகின்றனர் அப்படிப்பட்ட கனவுகளுக்கு என்னனென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

 • மயில் பறந்து வந்து, மற்ற பறவைகளை பிடித்து உண்பது போலவும், அதை குட்டிகளுக்கும் ஊட்டுவது போலவும் கனவு கண்டால் செய்யும் செயல்களால் செல்வாக்கும், பொருள் வரவும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
 • தலையில் பூ வைப்பது போல் கனவு கண்டால் சுபச் செயல்கள் கூடிய விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.
 • வீட்டிற்கு தெற்கு புறம் இயற்கை அழிவு வருவது போல் கனவு கண்டால் செலவு செய்யும்போது தேவையை அறிந்து செயல்படுவது நன்மையை அளிக்கும் என்பதைக் குறிக்கிறது.
 • நோய்வாய்ப்பட்டவர் கனவில் வந்தால் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
 • குழப்பமான எண்ணங்களிலிருந்து தெளிவு பிறக்கும். விபூதி தட்டு தவறவிடுவது போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
 • பிரதமர், ஜனாதிபதி ஆவது போல் கனவு கண்டால் அந்தஸ்து புகழ் ஏற்படும். கன்னி பயன் அல்லது பெண்களுக்கு இந்த மாதிரி கனவு வந்தால் வரப்போகும் வாழ்க்கைத்துணை வசதி மிக்கவராக இருக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
 • அடிதடி சண்டை போடுவது போல கனவு கண்டால் உங்கள் வாழ்கை அமைதியானதாக அமையும். மேலும் எதிரிகள் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தாலும் அவர்கள் நண்பர்கள் ஆகி விடுவார்கள்.
 • இறந்தவர்கள் கனவில் வந்து பேசுவதுபோல கனவு கண்டால் நீங்கள் பேர், புகழ் அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
 • கோவில் கனவுகளில் வந்தால் செய்யும் தொழில் விரக்தி அடையும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும்.
 • அலுவலகத்தில் வேலை பார்ப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு நல்ல காலம் என்று அர்த்தம். வேலை கிடைக்காதவர்களுக்கு விரைவில் நல்ல வேலை அமையும்.
 • இறந்த தாய் தந்தையர் கனவில் வந்து பேசினால் நமக்கு எதோ துன்பம் வரப்போவதை எச்சரிக்கின்றனர் என்று அர்த்தம்.
 • கோவிலில் விழாக்கள் நடைபெறுவது போன்று கனவு கண்டால் உறவினர்கள் யாரோ மரணம் அடைய போகிறார்கள் என்று அர்த்தம்.
 • உங்கள் கனவில் எதிரிகள் வந்தால் எதோ கேட்டது நடக்க போகிறது என்று அர்த்தம்.
 • கடல் கனவில் வந்தால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். இல்லையெனில் வெளிநாட்டு அலுவலகங்களில் வேலை கிடைக்கும்.
 • நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை ஏற்படும். மேலும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், புகழ் பன்மடங்கு பெருகும்.
 • தான் அடிபட்டு காயமடைந்திருப்பது போல் கனவு கண்டால், தன அபிவிருத்தி உண்டாகும்.
 • ஒருவர் அரிசியைக் கனவில் கண்டாலோ அல்லது சந்தையில் வாங்கி வருவது போன்று கனவு கண்டாலோ அவர் செய்யும் தொழில் அபிவிருத்தி அடைந்து மிகுந்த தனலாபம் ஏற்படும்.

நீங்கள் அழுவது போல கனவில் வந்தால் உடனே பதட்டம் கொள்ள வேண்டாம். கனவில் நாம் அழுவது என்பது நம் ஆழ்மனதில் பதிந்து உள்ள எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பு தான். நிறைய விஷயங்களை நினைத்து மனமானது பதைபதைத்து கொண்டிருக்கும் ஆனால் அதனை வெளியில் காண்பிக்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே மனமானது புழுங்கிக் கொண்டிருக்கும். இந்த சமயத்தில் அதனை வெளிப்படுத்த கனவை பயன்படுத்திக் கொள்ளும்.வெளியில் சொல்ல முடியாத சோகங்களை வைத்திருப்பவர்களுக்கு இது போன்ற கனவுகள் நிச்சயம் வரும் என்கிறது கனவு பலன்.


Next Story
Share it