தீரா நோய்களையும் தோஷங்களையும் தீர்க்கும் அய்யன் கோவில் !

தீரா நோய்களையும் தோஷங்களையும் தீர்க்கும் அய்யன் கோவில் !

தீரா நோய்களையும் தோஷங்களையும் தீர்க்கும் அய்யன் கோவில் !
X

கோவை சோமனூரை அடுத்து அமைந்துள்ளது வாழைத் தோட்டத்து அய்யன் கோவில். இந்த கோவில் கொங்கு மண்டல மக்களால் போற்றப்படுகிறது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும், வாழைத் தோட்டத்து அய்யன் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும், தீரா நோய்களையும் தோஷங்களையும் தீர்க்கும் இந்த கோயிலின் சிறப்பினை காணலாம் வாங்க...

தோஷங்கள் தீர்க்கும் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் !

சோமனூரை அடுத்த அய்யம்பாளையத்தில் செங்காளியப்பனுக்கு மகனாக பிறந்தவர் தான் சின்னையன். இவர் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவர். இவர் ஒரு காலகட்டத்தில் தந்தையின் விருப்பப்படி மாடுகளை மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். மாடுகளை மேக்கும் போது கற்களைச் சேர்த்து அதற்கு மாலை போட்டு அதை வழிபடும் ஒரு வழக்கத்தை மேற்கொண்டார். சின்னையன் தனது ஊருக்கு அருகில் உள்ள காளிபாளையத்தில் வாழைதோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து வாழை சாகுபடி செய்து வந்தார். அதனால் அவரை வாழை தோட்டத்து அய்யன் என்று அழைத்தனர். ஒருநாள் சின்னையன் கனவில் சிவ சொரூபமாக ஒரு முனிவர் தோன்றி ஆசீர்வதித்தாராம். மறுநாள் வழக்கம் போல மேய்ச்சலுக்கு வந்த சின்னையன், தன்னை மறந்து பாடியபடி சிவ வழிபாடு செய்தான். பின்னர் புன்னகையுடன் சித்த மூர்த்தியொருவர் வீற்றிருக்கக் கண்டான். உடனே அவர் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தான். அவன் செலுத்திய மரியாதையில் மகிழ்ந்த பெரியவர், அம்மேடையின் அருகில் நச்சுப் பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டார். பின்னர் சின்னையனிடம் அந்த பாம்பை அசையாமல் அங்கேயே நிற்கும்படி நாம் ஆணையிட்டதாகக் கூறு என்று கூறினார். வேண்டுகோளுக்குக்கிணங்க சின்னையன் அந்த பாம்பை நில் என்றும் போ என்று சொல்ல பாம்பும் அவ்வாறே செய்தது.

தோஷங்கள் தீர்க்கும் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் !

இதனால் திகைப்புற்ற சின்னையன், அம்மகான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அருட் பெருங்குருவே, நஞ்சுள்ள நாக பாம்புகளாலும் பிற விஷப் பிராணிகளாலும் துன்புறும் மக்களை காப்பாற்ற போதி அருள வேண்டும் என்று பிரார்த்தித்தான். பின்னர் விஷ முறிவு மந்திரத்தை அவனுக்கு உபதேசித்து பக்தி யோகத்தின் பெருமையை விளக்கி காட்டினார். பின்னர் அந்த மகான் சின்னையன் வேண்டுகோளுக்கு மனமிரங்கி அவன் இல்லத்திற்கு எழுந்தருளினார். இல்லத்தில் தனி அறையில் அமர்ந்தார் சித்தர். சிறிது நேரத்தில் சித்தர் மறைந்துவிட்டார். சின்னையன், தன்னை நாடி வரும் நோயாளிகளின் தீராப்பிணியையும், பாம்பு, தேள் முதலிய விஷஜந்துகளால் மக்கள் துன்பம் அடைவதை திருநீற்றால் தீர்த்துவைத்தார்.

தோஷங்கள் தீர்க்கும் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் !

ஒரு பெண்ணுக்கு வெண்குஷ்ட நோய்க்கு திருநீரு பூசி குணமாக்கினார். அப்போது அந்த பெண்கொடுத்த பொற்காசுகளை வாங்க மறுத்து எவரிடமும் கைமாறு வாங்காமல் சேவை செய்தார். இப்படி பல அற்புதங்களை நிகழ்த்தினர் சின்னையன். அய்யன் தனது பண்ணையில் காளைக் கன்றுகுட்டி ஒன்றைப் பிரியமுடன் வளர்த்து வந்தார். ஒருநாள் இரவு ஈசன் கனவில் தோன்றினார். அப்போது அய்யனே நீ 72 வயது பூர்த்தியாகி, இவ்வுலகம் வாழ்ந்த காலம் முடிவு பெறுகிறது என்றாராம். அப்பொழுது வானத்தில் அற்புத ஒளியுடன் நந்தி தேவர் பூத கணங்களோடு தோன்றினார். வானத்திலிருந்தும் இறங்கி வந்து காளையின் இரு கொம்பினிடையே நின்றார். அந்த காளையும் அய்யனை நோக்கி விரைந்து வந்து தனது கூரிய கொம்பினால் வயிற்றில் குத்தி மேலே தூக்கி எறிந்ததால் இறைவன் திருவடி சேர்ந்தார்.

தோஷங்கள் தீர்க்கும் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் !

திருக்கயிலாயம் சென்ற அய்யன், தோட்டத்து பண்ணையாரின் கனவில் தோன்றி தாம் பூசித்த லிங்கம் நந்தி, இவைகள் மறைந்திருக்கும் இடத்தை சொன்னார். பின்னர் ஊர்மக்கள் அதை எடுத்து வந்து அவர் முக்தியடைந்த கிளுவை மரத்தடியில் வைத்து வழிபாடு செய்து வந்தனர். இந்த மரத்தடியில் இருக்கும் லிங்கமும் நந்தியும் மிகச்சிறியது, அதன் பக்கத்தில் இருக்கும் பாம்புப் புற்று வளர்ந்தது. அந்த புற்று மண்ணே இன்றும் ஆயிரக்கணக்கானோரின் பிணி போக்கும் அருமருந்தாக பயன்படுகிறது.

தோஷங்கள் தீர்க்கும் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் !

பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைத்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். வாழைத் தோட்டத்து அய்யன் கோயில் கருவறையிலும், வெளிப்பகுதியிலும் புற்று மண் உள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷஜந்து தீண்டப் பெற்றவர்கள் இங்குவந்து புற்று மண்ணை எடுத்து விஷம் தீண்டப்பட்ட இடத்தில் தேய்த்துவிட்டால் நோய் நீங்கப்பெறுவதாக கூறுகின்றனர். மேலும் கோயிலுக்கு வருபவர்கள் புற்று மண்ணை வீட்டுக்கு எடுத்துச்சென்று தண்ணீரில் கரைத்து வீடுகளில் தெளித்தால் விஷப்பூச்சிகள் வருவதில்லை எனக் கூறுகின்றனர்.

தோஷங்கள் தீர்க்கும் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் !

இக்கோயிலில் மூலஸ்தானமே கிலுவை மரமாகவும், அதன் அருகே புற்றின் மேல் சிவலிங்கமும், நந்தியும் அமைந்து அற்புதமாக விளங்குகின்றன. மூலஸ்தானத்தைச் சுற்றி மூன்று புறமும் விநாயகர் கோயிலும், கர்ப்ப கிரகத்தின் மேற்கூரை வெட்டி வேரினால் வேயப்பட்டும், சுற்றிலும் கருங்கல் சுவர்களாகவும் அமைந்துள்ளன. வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு சிறப்பு நாட்களாகும். அமாவாசையன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Next Story
Share it