திருஞான சம்பந்த மூர்த்தி - 2

சிவத்தலத்தை வழிபட்டு சென்ற ஞானசம்பந்தருக்கு உச்சிநாதரை தரிசிக்கும் ஆசை எழுந்தது. ஆனால் எங்கு சென்றாலும் தந்தையின் தோள் மீது அமர்ந்து செல்வதால் சம்பந்தராருக்கு மனம் வருந்தியது. அதனால் தந்தையிடம் மறுத்து தனது பிஞ்சு பாதங்களால் தந்தையின் உடன் நடக்கலானார்.

திருஞான சம்பந்த மூர்த்தி - 2
X

இறைவனது திருவருளால் பொற்கிண்ணங்களில் பால் குடித்த ஞானசம்பந்தர் அழகிய தமிழில் அதைதெளிவுற பாடிய பாட லில் மகிந்த மக்களின் மனநிலையையும் அங்கு நடந்த அனைத்தையும் கேள்வியுற்ற பகவதியார் ஞானசம்பந்தருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். குழந்தையை அணைத்து முத்தமாறி பொழிந்தார். உலகை வென்ற உவகை உண்டானது.

ஒருநாள் தந்தையாருடன் சிவாலய தரிசனம் செய்ய சென்றார் ஞானசம்பந்தர். திருகோலக்காவை அடைந்ததும் கையால் தாளம் போட்டுக்கொண்டே மடையில் வாளையாய எனத் தொடங்கும் பதிகம் ஒன்றை பாடினார். பிஞ்சுக்கரங்கள் சிவக்க தாளம் போடும் குழந்தையின் கைகளில் ஐந்தெழுத்து மந்திரம் அடங்கிய பொன்னாலான இரண்டு தாளங்களை மலரில் வைத்து குழந்தையின் கரங்களில் கிடைக்க செய்தார்.

இறைவனின் கருணையால் உள்ளமும் உடலும் பூரித்த ஞானசம்பந்தர் அந்த தாளங்களை தன்னுடைய தலையில் வைத்து தாங்கினார். அவற்றால் தாளமிட்டு ஏழிசைகளும் தழைத்தோங்கும்படி பக்தி பெருக்கோடு தமிழிசை பொழிந்தார்.தந்தையா ருடன் சீர்காழிக்கு வந்த ஞானசம்பந்தரைக் காண மக்கள் படையெடுத்து வந்து திரண்டு வழிபட்டார்கள்.

எம்பெருமானுக்கு ஞானசம்பந்தர் திருத்தொண்டு புரிந்து வந்ததால் திருநனிப்பள்ளி மக்கள் தங்கள் ஊருக்கு வருமாறு வேண்டுதல் வைத்தனர். சம்பந்தரும் தனது தாயின் ஊரானநனிபப்பள்ளிக்கு சென்றார். திருநனிப்பள்ளிக்கு தந்தையாருடன் வந்து எம்பெருமானை தமிழ்மறைபாடினார் திருவலம்புரம், பல்லனீச்சரம், திருச்சாயக்காடு, திருவெண்காடு, திருமுல்லை வாயில்சிவத்தலங்களைத் தரிசித்து மீண்டும் சீர்காழியை அடைந்தார். இவரைப் பற்றி கேள்விபட்ட நீலகண்ட யாழ்ப்பாண ரும்,அவரது துணைவியாரும் ஞானசம்பந்தரைத் தரிசிக்க சீர்காழி வந்தார்கள்.

அவர்களைக் கண்டதும் ஞானசம்பந்தர் வணங்கி எழுந்து தேவார அமுது பொழிந்தார். தம்பதியார் யாழிசை மீட்டு மகிழ்ந் தார்கள்.இவருடைய பாடலும் தம்பதியரின் யாழிசையும் திக்கெட்டும் பாலும், தேனும் கலந்து பொழிந்தது போல் இருந்தது. ஞானசம்பந்தராருக்கு தில்லை நடராசனை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது.

யாழ்ப்பாணரோடு தந்தையின்மீதேறி நடராசரை சந்திக்க கிளம்பினார். தில்லை வாழ் மக்களுக்கு ஞான சம்பந்தராரின் வரு கை மகிழ்ச்சியைக் கொடுத்த து. உற்சாகமான வரவேற்பை தந்து வரவேற்றார்கள். ஏழு கோபுரங்களையும் வணங்கிய படி ஆலயத்துக்குள் நுழைந்த ஞான சம்பந்தர் பதிகம் பாடியபடி நடராசரை வணங்கினார். அங்கிருந்தபடியே தொண்டு செய்த ஞானசம்பந்தர் அருகில் உள்ளதிருவேட்களத்துக்கும் சென்றார். மீண்டும் அங்கிருந்து தில்லையாரையும் தரிசித்தார். பிறகு தமது ஊருக்கு திரும்பினார்.

வழிநெடுகிலும் இருக்கும் சிவத்தலத்தை வழிபட்டு சென்ற ஞானசம்பந்தருக்கு உச்சிநாதரை தரிசிக்கும் ஆசை எழுந்தது. ஆனால் எங்கு சென்றாலும் தந்தையின் தோள் மீது அமர்ந்துசெல்வதால் சம்பந்தராருக்கு மனம் வருந்தியது. அதனால் தந் தையிடம் மறுத்து தனது பிஞ்சு பாதங்களால் தந்தையின் உடன் நடக்கலானார். இருவரும் நடந்துசெல்லும் போது இரவு நேரமானதால் வழியில் ஒர் ஊரில் தங்கினார்கள்.

இறைவனுக்கு சம்பந்தரார் பட்டுபாதங்கள் வலிக்க நடந்துவருவது தாங்கவில்லை. அடியாரின் கனவில் தோன்றி சம்பந்த ரார் பட்டுபாதம் வலிக்க எம்மை தரிசிக்க வருகிறான். அவனை அழைத்துவர முத்துப்பல்லக்கை அனுப்பியிருக்கிறோம். அதைக் கொண்டு அழைத்துவாருங்கள் என்றார். சம்பந்தராரின் கனவிலும் தோன்றி நாளை உன்னை முத்துப்பல்லக்கு கொண்டு அழைத்துவருவார்கள். தயங்காமல் அதில் அமர்ந்துவரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

மறுநாள் திருஞானார் இறைவனின் திருவருளை எண்ணி பதிகம் ஒன்றை பாடினார். அச்சமயம் அடியார்களும் முத்துக் கொடையுடன் வந்தார்கள். தந்தையையும், மகனையும் அதில் அமர்த்தி மேளங்கள் கொட்டி அவர்களை அரத்துறை திருக் கோயிலுக்கு அழைத்து சென்றார்கள். அரத்துறையாரை வழிபட்டு சில காலம் அங்கிருந்த ஞானசம்பந்தர் மீண்டும் சீர்காழி திரும்பினார்.

தினமும் தோணியப்பரை வணங்கி வளர்ந்த ஞானசம்பந்தரருக்கு உரிய காலத்தில் முப்புரி நூலணியும், சடங்கும் சிறப்பாக நடத்தினார்கள். ஞானசம்பந்தராரைக் காண திருநாவுக்கரசர் சீர்காழி வந்திருந்தார். அவரது வருகையை அறிந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி கொண்டார்கள்.ஞான சம்பந்தர் திருநாவுக்கரசரை அப்பரே என்று அழைத்து மகிழ்ந்தார். இருவரும் தோணியப்பரை தரிசித்து மகிழ்ந்தார்கள்.

சம்பந்தர் வீடுபேற்றை அளிக்கும் அதன் உண்மையான இயல்பை உணர்த்தும் சன்மார்க்க பதிகங்களாக திருமாலை மாற்று, வழிமொழித் திருவிராகம், திருமொழி மாற்று, திருஏகபாதம், திருவிருக்குறள், திருவெழுக கூற்றிருக்கை போன்ற பதிகங் களை உள்ளம்உருக பாடினார். ஒரு நாள் தந்தையுடன் மீண்டும் எம்பெருமானைக் காண திருப்பாச்சிலாச்சிரமத்தை அடைந் தார்கள். உடன் யாழ்பாணரும் சென்றார். அப்போது…

Newstm.ina

newstm.in

Next Story
Share it