புரட்டாசி மாதத்தில் மழை பெய்தால் மண் உருக பெய்யும்... என்ன அர்த்தம் தெரியுமா ?

புரட்டாசி மாதத்தில் மழை பெய்தால் மண் உருக பெய்யும்... என்ன அர்த்தம் தெரியுமா ?
X

புரட்டாசி மாதம் என்பது ஜோதிடத்தில் கன்னி ராசியைக் குறிக்கும். நவகிரகங்களில் மஹாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில் தான். எனவே தான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதமான புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாகிறது.

அதோடு, பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில், புதனோடு, சூரியனும் இணைந்து கன்னி ராசியில் இருப்பார். சூரியனுக்கு உரிய அதிதேவதை பசுபதி என்று அழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய தி தேவதை விஷ்ணு. ஆக சூரியனும்,புதனும் கூடும் தெய்வீக மூலையான கன்னி மூலையில் இணைவது, சங்கரனும் நாராயணனும் இணைவது போன்றது. சூரிய நாராயண சுவாமி என்று சூரியன் பெயர் பெற காரணமும் இதுவே ஆகும்.

சந்திரன் முழு நிலவாக தெரியும் பவுர்ணமியில் வரும் நட்சத்திரமே இம்மாதத்தின் பெயராகவும், கோவில் திருவிழாவாகவும் வைத்தனர். மின் விளக்குகள் இல்லாத அந்த காலத்தில் நிலவு ஒளியில் கூடுவதை சிறப்பாக கருதினர். அதனால் தான் ஆண்டாள்

"மார்கழித் திகழ் மதி நிறைந்த நன்னாளால் நீராடக் போதுவீர் "

என்று பாடி இருக்கிறார். பொதுவாக முழு நிலவை ஒட்டியே திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

புரட்டாசி கன்னி மாதம்.சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் கன்னி மாதம். இந்த மாதத்தில் மழை பெய்தால் மண் உருக பெய்யும். காய்ந்தால் பொன் உருகக் காயும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதாவது, பாலில் பொன்னை உருக்கும் அளவுக்கு வெயில் அடிக்கும். இரவு நேரத்தில் மழை பெய்யும் என்று அர்த்தமாம். " குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா"என மனமுருக பாடி, நெற்றியில் திருமண் இட்டு, பஜனை செய்து, வீடுகளில் பாத்திரத்தில், செம்பில் பிச்சை ஏற்று, அதனை சமைத்து விரதம் முடிப்பார்கள்.

பெருமாள் பக்தர்கள் சிலர். இந்த புரட்டாசி மாதம் முழுவதும், பலவிதமான பண்டிகைககள்,விழாக்கள் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இந்த மாதம் முழுவதும் பெருமாளின் திவ்ய நாமங்களை சொல்லி வந்தால், சனீஸ்வரனின் கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.

சொல்லவேண்டிய பெருமாள் துதி

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க் லீம்

ஓம் நமோ ஸ்ரீ வேங்கடாசாய நமஹ..

Next Story
Share it