பண்டைய காலத்தில் சூரிய கிரகணம் வந்தாலே மூதாதையர்கள் பதட்டமும், பயமும் அடைவார்கள்... ஏன் தெரியுமா ?

பண்டைய காலத்தில் சூரிய கிரகணம் வந்தாலே மூதாதையர்கள் பதட்டமும், பயமும் அடைவார்கள்... ஏன் தெரியுமா ?
X

அந்த காலத்தில் சூரிய கிரகணம் வந்தாலே மூதாதையர்கள் பதட்டமும், பயமும் அடைவார்கள் காரணம் சூரிய கிரகணம் வந்தால் துன்பம் வந்து விடும், அதற்கு காரணம் தெய்வத்தின் கோபமே என பல மூட நம்பிக்கைகள் வலம் வந்துள்ளன. அதன் பின் வானியல் ஆய்வாளர்கள் வானியல் அதிசயத்தையும் அதன் தோற்றம், காரணங்களை கண்டு பிடித்து விளக்கியுள்ளனர்.

இந்து மதரீதியில் பார்க்கும் போது கேது கிரகம், சூரியனை விழுங்கி பின் கக்குவதாகவும், இந்த நேரத்தில் கேதுவினால் கொடிய விஷம் வெளியிடப்படுவதனால் நமக்கு பல தீமைகளைத் தருமென கூறப்படுகின்றது. பாம்பு பார்த்தால் கொத்தி, விழுங்காமல் விடாது என கூறப்படுவது. இதனால் வாழ்வில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும், நோய்கள் பாதிக்கும் என அச்சுறுத்துகின்றனர்.

அர்ஜூனனுக்கு மட்டும்தான் சக்கரவியூகத்தை உடைக்கும் திறமை உடையவன், அப்போது துரியோதனன் அர்ஜூனனை சக்கரவியூகத்திற்குள் கொண்டு செல்கிறார். அர்சுனன் வெளிவரமுடியாமல் திணறுகிறான். உடனே தந்தையை காப்பாற்ற அபிமன்யூ சக்கர வியூகத்தை உடைத்துக்கொண்டு போய் யுத்தம் செய்கிறான். அப்போது அபிமன்யூ இறந்துவிடுகிறார். யுத்தம் முடிந்து அர்ஜுனன் சக்கரவியூகத்தில் இருந்து வெளியே வந்தார். அபிமன்யூ இறந்ததை எண்ணி வருத்தமடைகிறார். அபிமன்யூவை துரியோதரர்களான ஜெயத்ரதன் கொன்றதாக கேட்டு ஒரு கோர சபதம் எடுக்கிறார்.

என் மகன் இறக்க காரணமாக இருந்த ஜெயத்திரதனை நாளை மாலை சூரியன் மறைவதற்குள் கொன்று விடுவேன் அப்படி முடியவில்லை என்றால் நான் தீயில் விழுந்து உயிர் தியாகம் செய்வேன் என சபதம் செய்தார்.

இதையறிந்த துரியோதரர்கள் ஜெயத்ரதனை அர்சுனனின் கண்ணில் படாமல் பாதுகாத்தனர். இதனால் அர்சுனனால் ஜெயத்ரதனை கொல்ல முடியவில்லை. கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தை ஆகாயத்தில் செலுத்தி சூரியனை மறைத்து விட்டார். சூரியன் மறைந்தது ஆனால் ஜெயத்ரதனை அர்சுனன் கொல்லவில்லை. இதனால் அக்னி குண்டத்தில் விழ அர்சுனன் தயாரானார். இதையறிந்த துரியோதரர்கள் அர்சுனன் இறப்பை காண ஆவலுடன் வந்தனர். சூரியன் மறைந்துவிட்டது இனி நம்மை யாராலும் எதுவும் செய்யமுடியாது என ஜெயத்ரதனும் வந்துவிட்டார். உடனே சூரியனுக்கு முன் விட்ட சக்ராயுதத்தை திருப்பி பெற்றார். உடனே சூரியன் வந்துவிட்டது. உடனே கிருஷ்ணன் அங்கு தோன்றி அம்பை எடுத்து அர்சுனனிடம் கொடுத்து ஜெயத்திரதனை கொல்ல செய்தார். கிருஷ்ணரால் சூரியன் சிறிது நேரம் மறைக்கப்பட்ட அந்த நிகழ்வே 'சூரிய கிரகணம்' என பண்டைய காலத்தில் அழைத்தனர்.

இதேபோன்று சூரிய கிரகணத்தின்போதுதான் ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரியவர்கள் சூரிய கிரகணம் அழிவுக்கான ஆரம்பம் என எண்ண ஆரம்பித்தனர். வானியல் மாற்றங்கள் மீண்டும் நடக்கலாம்! ஆனால் வரலாற்று மாற்றங்கள்? நடக்காது அல்லவா... இதற்கு பிறகு தான் சூரிய கிரகணம் என்பது வானியல் மாற்றங்கள்தான் சூரியன், சந்திரன், பூமி இடையே நடக்கும் உன்னதமான விஞ்ஞான நிகழ்வு என்பது அனைவருக்கும் தெரியவந்தது.

Next Story
Share it