தீராத கடன் தொல்லை தீர்க்கும் திருச்சேறை ஸ்ரீ சார பரமேஸ்வரர் கோவில்…!

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை என்ற ஊரில் அமைந்துள்ள ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ சார பரமேஸ்வரர் கோவில் கடன் நிவாரண தலமாக விளங்குகிறது. தீராத கடன் தொல்லை, தீவிர பிரச்சனைகளில் சிக்கி இருப்போரும், இந்த பிறவியின் மட்டுமின்றி, முந்தைய பிறவிகளிலும் பெற்ற பிறவிக்கடன்களும் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் சென்று வழிபட வேண்டிய கோவிலாகும்.
இது தேவார பாடல் பெற்ற சிவ தலங்களில் 95 வது தலமாக உள்ளது. சோழ மண்டலத்தின் காவிரி ஆற்றங்கரையின் தென்கரையில் இந்த தலம் அமைந்துள்ளது. பூர்வ ஜென்ம கடன்களில் இருந்து விட எண்ணிய மார்கண்டே முனிவர் இந்த தலத்திற்கு வந்து, சிவ லிங்கம் ஒன்றத பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவரது பக்தியில் மகிழ்ந்த சிவ பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து, பிறக்கடன்களில் இருந்து அவரை விடுவித்து, மோட்சம் வழங்கினார்.
பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் துயர்களை போக்கி, அவர்களின் வாழ்க்கையை சரியான வழியில் இட்டு செல்வதால் இத்தல இறைவன் செந்நெறியப்பர் என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி செல்கின்றனர்.
இத்தலம் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்றதாகும். கிழக்கு நோக்கி, ஐந்து நிலை ராஜகோபுரங்களுடன் அமைந்த இக்கோவில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது என தல புராணம் சொல்கிறது.