அர்த்தநாரீஸ்வரர் - சிவன் பாதி பெண்ணாக மாறியது ஏன்?

பொதுவாக சிவன் இணையில்லாத (நிகரற்ற) ஆண் என்று குறிப்பிடப்படுகிறார், அவர் இணையில்லாத ஆண்மையின் அடையாளமாக இருக்கிறார், ஆனால் சிவனின் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில், ஒரு பாதி முழு வளர்ச்சியடைந்த பெண். அதன் கதை என்னவென்றால், சிவபெருமான் பரவச நிலையில் இருந்ததால், பார்வதி அவர்பால் ஈர்க்கப்பட்டார். பார்வதி அவரைக் கவர பல காரியங்களைச் செய்து, எல்லாவிதமான உதவிகளையும் நாடிய பிறகு, அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் திருமணமானவுடன், இயற்கையாகவே, சிவன் அவரது அனுபவத்தைப் பார்வதியிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினார்.
பார்வதி அவரிடம், “உங்களுக்குள் நீங்கள் அனுபவிக்கும் இந்த நிலையை நானும் அனுபவிக்க விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? கூறுங்கள், எந்த விதமான கடினமான செயலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்றார். சிவன் சிரித்துக்கொண்டே, “நீ பெரிய சாதனா எதுவும் செய்யத் தேவையில்லை. நீ இங்கு வந்து என் மடியில் உட்கார்” என்றார். பார்வதி அதை ஏற்று, அவரின் இடது மடியில் அமர்ந்தாள். அவள் முழு விருப்பத்துடன் இருந்ததால், தன்னை முழுவதுமாக அவரின் கைகளில் ஒப்படைத்தாள், அவர் அப்படியே அவளை உள்ளே இழுத்தவுடன் அவரில் பாதியாக மாறினாள்.
அர்த்தநாரீஸ்வரர் கதையின் உள் அர்த்தம்
நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், அவர் தனது சொந்த உடலில் அவளுக்கு இடமளிக்க வேண்டும் என்றால், அவர் தன் பாதியை இழக்க வேண்டும். அதனால் தன் பாதியை உதறிவிட்டு அவளையும் சேர்த்துக்கொண்டார். இது தான் அர்த்தநாரீஸ்வரரின் கதை. இது அடிப்படையில் உங்களுக்குள் ஆண்பால் மற்றும் பெண்பால் சமமாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கிறது. அவளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டதும் அவர் பரவசமடைந்தார். சொல்லப்படுவது என்னவெனில், உள்நிலையில் ஆண்மையும் பெண்மையும் சந்தித்தால், நீங்கள் நிரந்தரமான பரவச நிலையில் இருக்க முடியும். நீங்கள் அதை வெளியில் செய்ய முயற்சித்தால், அது ஒருபோதும் நீடிக்காது, அதனால் வரும் அனைத்து பிரச்சனைகளும் ஒரு முடிவில்லா நாடகம்.
அடிப்படையில், இது இரண்டு பேர் சந்திக்க ஏங்குவது அல்ல, சந்திக்க விரும்புவது வாழ்க்கையின் இரு பரிமாணங்கள் - வெளியிலும் உள்ளேயும். அது உள்ளே அடைந்தால், வெளியே நூறு சதவீதம் விருப்பப்படி நடக்கும். உள்ளுக்குள் சாதிக்காவிட்டால், வெளியில் பயங்கரமான நிர்ப்பந்தம் ஏற்படும். இதுதான் வாழ்க்கை முறை. சிவன் அவளைத் தன் பாகமாக சேர்த்துக்கொண்டு பாதிப் பெண்ணாகவும் பாதி ஆணாகவும் ஆனார்.
உச்சபட்ச நிலையில் நீங்கள் பரிணாம வளர்ச்சியடைந்தால், நீங்கள் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் இருப்பீர்கள் - ஒரு திருநங்கை அல்ல - ஒரு முழு அளவிலான ஆணாகவும், ஒரு முழுமையான பெண்ணாகவும் இருப்பீர்கள் என்பதைக் காட்ட இது ஒரு அடையாளமாகும். அப்போதுதான் நீங்கள் முழுமையான மனிதனாக இருப்பீர்கள். நீங்கள் முழுமையடையாத வளர்ச்சியல்ல, நீங்கள் ஆண்பால் அல்லது பெண்பால் மட்டுமல்ல, இந்த இரண்டையும் வளர அனுமதித்திருக்கிறீர்கள். ஆண் அல்லது பெண் என்று அர்த்தமல்ல. "பெண்பால்" மற்றும் "ஆண்பால்" என்பது சில குணங்கள். இந்த இரண்டு குணங்களும் உள்ளுக்குள் சமநிலையில் நிகழும்போதுதான், ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கையை வாழமுடியும்.
படைப்பின் அடையாளமாக அர்த்தநாரீஸ்வரரின் கதையை நீங்கள் பார்த்தால், இந்த இரண்டு பரிமாணங்களும் - சிவன் மற்றும் பார்வதி அல்லது சிவன் மற்றும் சக்தி - புருஷன் மற்றும் ப்ரக்ருதி என்று அறியப்படுகின்றன. "புருஷ்" என்ற வார்த்தை இன்று பொதுவாக "மனிதன்" என்று புரிந்துகொள்ளப்படுகிறது, ஆனால் அதன் அர்த்தம் அதுவல்ல. ப்ரக்ருதி என்றால் "இயற்கை" அல்லது "படைப்பு". புருஷ் என்பது படைப்பின் ஆதாரம். படைப்பின் ஆதாரம் இருந்தது, படைப்பு நடந்தது, அது படைப்பின் மூலத்துடன் சரியாக பொருந்தியது. இருப்பு தொடக்க நிலையில், சிருஷ்டி நிலையில் இல்லாதபோது, அது ஒடிந்து திடீரென்று சிருஷ்டியாக மாறியது. அது புருஷன் என்று குறிப்பிடப்படுகிறது. மனிதன் பிறந்தாலும், எறும்பு பிறந்தாலும், பிரபஞ்சம் பிறந்தாலும் அது ஒரே விதமாகதான் நடக்கிறது. மனித புரிதலின் அடிப்படையில், இது ஆண் அல்லது ஆண்பால் என்று குறிப்பிடப்படுகிறது.
மொத்த மக்கள்தொகையும் ஒரு மனிதனின் ஒரே செயலால், உடலுறவு காரணமாக நடந்தது, இல்லையா? அது பெரிய செயல் அல்ல. இது எந்த வகையிலும் நடக்கலாம். இது பொறுப்பற்ற முறையில், அலட்சியமாக, வலுக்கட்டாயமாக, கோபத்தில், வெறுப்பில் நிகழலாம் - அது அழகாக நடக்க வேண்டும் என்று அவசியமில்லை. எப்படி செய்தாலும் மக்கள்தொகை வளரும். ஆனால் கருவறையில் நடப்பது ஏதோ ஒரு வகையில் நடக்கக்கூடாது. இது மிகவும் ஒழுங்காகவும் அழகாகவும் நடக்க வேண்டும், இல்லையெனில் அது வேலை செய்யாது. தவறாக நடந்தாலோ அல்லது வன்முறையாக நடந்தாலோ வாழ்க்கை நடக்காது.
எனவே, இந்த அடிப்படை செயல்முறையைப் பார்க்கும்போது, உருவாக்கம் என்பது ஏதோ ஒரு செயல் போல உள்ளது. அது புருஷா என்று அழைக்கப்படுகிறது, ஆனால் இதை ஏற்றுக்கொண்டு மெதுவாக வாழ்க்கையாக பரிணாமம் அடைவது ப்ரக்ருதி அல்லது இயற்கை என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் இயற்கையானது பெண்ணாகக் குறிப்பிடப்படுகிறது.