'கோலி சோடா 2' படக்குழுவுக்கு உதவும் விஷால்

'கோலி சோடா 2' படத்தின் 2-வது சிங்கிள் ட்ராக்கை இன்று மாலை நடிகர் விஷால் வெளியிடுகிறார்.
 | 

'கோலி சோடா 2' படக்குழுவுக்கு உதவும் விஷால்

'கோலி சோடா 2' படக்குழுவுக்கு உதவும் விஷால்

'கோலி சோடா 2' படத்தின் 2-வது சிங்கிள் ட்ராக்கை இன்று மாலை நடிகர் விஷால் வெளியிடுகிறார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டனின் இயக்கத்தில் வந்து ஹிட்டான ’கோலி சோடா’வின் இரண்டாம் பாகத்தையும் உருவாகி இருக்கிறார் விஜய் மில்டன். 

இப்போது உருவாகியிருக்கும் ‘கோலி சோடா 2’ படத்தில் சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா,சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.இந்தப் படத்தை ரஃப் நோட் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

'கோலி சோடா 2' படக்குழுவுக்கு உதவும் விஷால்

’கோலி சோடா 2’படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி, கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியிட்டார். சமீபத்தில் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள’பொண்டாட்டியே’என்கிற சிங்கிள் ட்ராக் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெறும் ’கெளம்பு..’என்கிற 2-வது சிங்கிள் ட்ராகை இன்று மாலை நடிகர் விஷால் வெளியிடுகிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP