'டிராஃபிக் ராமசாமி' 2-வது சிங்கிள் ட்ராக் ரிலீஸ்! 

'டிராஃபிக் ராமசாமி' படத்தின் ’கோமாளி’ என்கிற 2-வது சிங்கிள் ட்ராக் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
 | 

'டிராஃபிக் ராமசாமி' 2-வது சிங்கிள் ட்ராக் ரிலீஸ்! 

'டிராஃபிக் ராமசாமி' படத்தின் ’கோமாளி’ என்கிற 2-வது சிங்கிள் ட்ராக் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

சமூகப் பிரச்னைகளுக்காக தனிமனிதனாக நின்று போராடும் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து, 'டிராஃபிக் ராமசாமி' என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் தயாராகியுள்ளது. இதில், டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க, அவரது மனைவியாக ரோகிணி நடித்திருக்கிறார்.

'டிராஃபிக் ராமசாமி' 2-வது சிங்கிள் ட்ராக் ரிலீஸ்! 

மேலும் பிரகாஷ்ராஜ் , ஆர்.கே.சுரேஷ் , அம்பிகா , உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம் ஆகியோரும் முக்கிய காதாப்பத்திரங்களில் என்று நடித்துள்ளனர். 

இப்படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். புதுமுக இயக்குனர் விக்கி இயக்குகிறார். ’ஹரஹரமகா தேவகி’ படத்தின் இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இந்தப் படத்துக்கு  இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ’போராளி’ என்கிற சிங்கிள் ட்ராக்கை சமீபத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ். வெளியிட்டார். இந்நிலையில், 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் ’கோமாளி’ என்கிற 2-வது சிங்கிள் ட்ராக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP