தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் 3-வது படத்தை அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்க உள்ளதாக அறிவித்தார். இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Wed, 5 Jun 2019
| பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் SKபுரொடக்ஷன் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்திவருகிறார். இவரின் முதல் தயாரிப்பான கனா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா என்கிற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் 3-வது படத்தை அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்க உள்ளதாக அறிவித்தார். இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in
newstm.in