திருநெல்வேலி மண்வாசனையுடன் வெளியிடப்பட்டது நெடுநல்வாடை  ட்ரைலர் !

நெடுநல்வாடை படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது. மண்வாசனையுடன் கூடிய காட்சிகள் மற்றும் பூராமுவின் உணர்ச்சி பொங்கிய டைலாக்குகள் என வீடியோவை படக்குழு வடிவமைத்துள்ளது.
 | 

திருநெல்வேலி மண்வாசனையுடன் வெளியிடப்பட்டது நெடுநல்வாடை  ட்ரைலர் !

மார்ச் 15ல் வெளியாக உள்ள நெடுநல்வாடை படத்தின் ட்ரைலர்  இன்று வெளியிடப்பட்டது .

பெரும்பாலும் புது முகங்களை கொண்ட படம் நெடுநல்வாடை.  இந்த படத்தை  செல்வக்கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பூ ராமு, மைம் கோபி,இளங்கோ, அஞ்சலி நாயர்,அஜய் நட்ராஜ், செந்தில் குமார் உள்ளிட்டோர்  நடிக்கின்றனர்.   இந்த படத்திற்கான தயரிப்பாளர்கள்  இயக்குனர் செல்வாவின் நண்பர்கள். தனது நண்பனின் வெற்றிக்காக சக நண்பர்கள் எடுத்த‌ முயற்சியே இந்த படம். 

இந்த படத்திற்கான பாடல் வரிகளை கவிபேரரசு வைரமுத்து  இயற்றி உள்ளார். திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் நடக்கும் கதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. மகள்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை எடுத்து சொல்லும் படமாக இந்த படம் இருக்கும் என படக்குழுவினர்  கூறுகின்றனர்.  நெடுநல்வாடை படத்தின் இசையை ஜோஸ் ப்ரங்கிலிங்  அமைத்துள்ளார் .  மேலும் நெடுநல்வாடை திரைப்படம் மார்ச 15ல் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில்  நெடுநல்வாடை படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது.  மேலும் இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும்  இயக்குனர் கௌதம்  வாசுதேவ்மேனன் ஆகியோர் வெளியிடப்பட்டது . மண்வாசனையுடன் கூடிய காட்சிகள்  மற்றும்  பூராமுவின் உணர்ச்சி பொங்கிய டைலாக்குகள் என வீடியோவை படக்குழு வடிவமைத்துள்ளது.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP