‘தளபதி64’ இல் இணைந்த சமீபத்தில் பிரபலமான வில்லன் நடிகர்

விஜய் நடித்து வரும் ‘தளபதி64’ திரைப்படத்தில் ‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார்.
 | 

 ‘தளபதி64’ இல் இணைந்த சமீபத்தில் பிரபலமான வில்லன் நடிகர்

விஜய் நடித்து வரும் ‘தளபதி64’ திரைப்படத்தில்  ‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார்.

’பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாமல்,  ‘தளபதி64’ தற்போது வரை அழைக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் எந்தெந்த நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள் என்று படக்குழு அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்த நிலையில், ‘தளபதி64’ இல் வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

 ‘தளபதி64’ இல் இணைந்த சமீபத்தில் பிரபலமான வில்லன் நடிகர்

அர்ஜுன் தாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான  ‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் இவரின், வில்லத்தனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முக்கியமாக குரலிலேயே மிரட்டும் வில்லத்தனமிக்க அர்ஜூன் தாஸின் நடிப்பு உண்மையிலேயே தியேட்டரில் மிரட்டியது படம் பார்த்தவர்களுக்கு தெரியும்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP