பாலிவுட்டுக்குப் போகும் இசையமைப்பாளர் தமன்!

பிரபல இசையமைப்பாளர் தமன், முதல் முறையாக பாலிவுட் பட உலகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார்.
 | 

பாலிவுட்டுக்குப் போகும் இசையமைப்பாளர் தமன்!

பாலிவுட்டுக்குப் போகும் இசையமைப்பாளர் தமன்!

பிரபல இசையமைப்பாளர் தமன், முதல் முறையாக பாலிவுட் பட உலகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார்.   

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் இந்தி ரீமேக்காக உருவாக இருக்கும் ‘சிம்பா’ படத்தில், ‘பத்மாவதி’ வில்லன் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார். ரன்வீர் சிங் முதன்முறையாக காக்கி சட்டை அணியப்போகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா அலிகான் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ் ஏற்று நடித்த வில்லன் கேரக்டரில் சோனு சூட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தர்மா புரொடக்சன்ஸ், ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ரோஹித் ஷெட்டி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். 

பாலிவுட்டுக்குப் போகும் இசையமைப்பாளர் தமன்!

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக தமன் கமிட்டாகியுள்ளதாக, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாக தட்டி உறுதிபடுத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்திருக்கும் தமன், ‘சிம்பா’படத்தின் மூலமாக முதல் முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார். ‘சிம்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP