பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும்: நடிகர் சித்தார்த்

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து அவர்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசினால் தான், குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்களை வலுப்படுத்த முடியும் என்று நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.
 | 

பொள்ளாச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி, ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் செல்போன்களிலும் மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. 

இதில், சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் அந்த கும்பலிடம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இது பொள்ளாச்சி பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து அவர்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசினால் தான், குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்களை வலுப்படுத்த முடியும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்” என பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP