அனுஷ்கா இனி நடிப்பாரா?

சமீப நாட்களாக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இந்நிலையில் தெலுங்கில் நாகர்ஜூனா நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
 | 

அனுஷ்கா இனி நடிப்பாரா?

அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களில் அதிக சிரத்தை எடுத்து நடித்தவர் ரியல் லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா. இவர் கடைசியாக பாகமதி என்ற படத்தில் நடித்திருந்தார். பொதுவாக இவர் நடிக்கும் படங்கள் தமிழ், தெலுங்கில் தயாராகும். 

ஆனால் சமீப நாட்களாக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஒன்று, 36 வயதைக் கடந்திருக்கும் அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறதென்ற செய்தி. இன்னொன்று, இஞ்சி இடுப்பழகி படத்துக்காக எடையைக் கூட்டிய அனுஷ்கா, எதிர்ப்பார்த்த படி மீண்டும் குறைக்க முடியாததால், தற்போது தீவிர எடைக்குறைப்பு வேலையில் மூழ்கியிருக்கிறார் என்பது. 

இந்நிலையில் நாகர்ஜூனா நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இன்னும் கொஞ்ச வருடமாவது அவர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது தான் அவரின் தீவிர விசிறிகளின் ஆசையாக உள்ளது குறிப்பிடத் தக்கது. 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP