எங்களை  ஓட்டு போட அனுமதிக்கவில்லை?  புகார் கூறும் நடிகர்கள்

நடிகர்கள் பெஞ்சமின் மற்றும் சிங்காரவேலன் ஆகியோர் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும், சென்னையில் வசிக்கும் தங்களை தபாலின் மூலம் தான் ஓட்டு போட வேண்டும் என நடிகர் சங்க தேர்தல் நிர்வாகம் தெரிவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
 | 

எங்களை  ஓட்டு போட அனுமதிக்கவில்லை?  புகார் கூறும் நடிகர்கள்

பல்வேறு கட்ட பிரச்சினைகளுக்கு இடையே நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்களைன் ஓட்டு போட அனுமதிக்கவில்லை என இரண்டு நடிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரஜினி தனக்கு தாபால்  ஓட்டு கிடைக்கப்பெறாததால் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் நடிகர்கள் பெஞ்சமின் மற்றும் சிங்காரவேலன் ஆகியோர் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும், சென்னையில் வசிக்கும் தங்களை தபாலின் மூலம் தான் ஓட்டு போட வேண்டும் என நடிகர் சங்க தேர்தல் நிர்வாகம் தெரிவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP