'விஸ்வாசம்' படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த நடனக்கலைஞர்; நடிகர் அஜித் என்ன செய்தார் தெரியுமா?

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பில் உடல்நிலைக்குறைவு ஏற்பட்ட நடனக்கலைஞரை மருத்துவமனையில் சேர்த்தார் நடிகர் அஜித். இறுதியில் அவர் உயிரிழக்கவே அவரது குடும்பத்திற்கு 8 லட்சம் அளித்துள்ளார் அஜித்.
 | 

'விஸ்வாசம்' படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த நடனக்கலைஞர்; நடிகர் அஜித் என்ன செய்தார் தெரியுமா?

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு புனே பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டபோது, நடனக்கலைஞர்களுள் ஒருவரான ஓம் சரவணன் என்பவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர் தொடர்ந்து வாந்தி எடுக்கவே, அவரை சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில்,  படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் அஜித்தும், மற்ற நடனக்கலைஞர்களும் உடன் சென்றுள்ளனர். நடிகர் அஜித் சுமார் 3 மணி நேரம் மருத்துவமனையில் இருந்துள்ளார். இறுதியில் அவர் உயிரிழந்ததையடுத்து நடிகர் அஜித் மிகுந்த வருத்தமடைந்துள்ளார்.

பின்னர், அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது குடும்பத்திற்கு நடிகர் அஜித் 8 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். நடனக்கலைஞர் உயிரிழந்தது ஒருபக்கம் வருத்தமளித்தாலும், நடிகர் அஜித்தின் இந்த உதவிக்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP