பிக்பாஸுக்குப் பிறகு விஜியின் முதல் படம் !

இம்சை அரசன், புலி போன்ற படங்களைக் கொடுத்த, இயக்குநர் சிம்புத்தேவன் இந்தப் படத்தை இயக்குகிறார். இயக்குநர் வெங்கட்பிரபு இதனை தயாரிக்கிறார். ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ் ஆகியோருடன் பிக்பாஸ் விஜியும் நடிக்கிறார்
 | 

பிக்பாஸுக்குப் பிறகு விஜியின் முதல் படம் !

சென்னை 28 படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் எதுவும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை. இதற்கிடையில் திருமணம், குழந்தை என தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த இவர், சீரியலில் நடித்தார். 

அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வரவே, சீரியலில் இருந்து விலகி, அந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் போனார். நிகழ்ச்சியின் இறுதி வரை வீட்டிற்குள் இருந்தவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், இவர் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இம்சை அரசன், புலி போன்ற படங்களைக் கொடுத்த, இயக்குநர் சிம்புத்தேவன் இந்தப் படத்தை இயக்குகிறார். இயக்குநர் வெங்கட்பிரபு இதனை தயாரிக்கிறார். 

தவிர, ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ் ஆகியோருடன் பிக்பாஸின் இன்னொரு போட்டியாளர் ஜனனியும் இதில் நடிக்கிறார். 

இந்தத் தகவலை விஜியே தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். 

newstm.in 
 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP