தளபதி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து : தந்தை, மகன் வேடத்தில் கலக்கும் விஜய் !

தளபதி 63 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் தந்தை மகன் என இரண்டு தோற்றத்தில் இருக்கிறார். அதோடு மகன் விஜய் விளையாட்டு வீரர் கெட்டப்பில் இருக்கிறார். முக்கியமான் விஷயம் இந்த படத்தின் பெயர் பிகில்.
 | 

தளபதி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து : தந்தை, மகன் வேடத்தில் கலக்கும் விஜய் !

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, தளபதி 63 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய், தந்தை - மகன்  என இரண்டு தோற்றத்தில் இருக்கிறார். அதோடு மகன் விஜய் விளையாட்டு வீரர் கெட்டப்பில் இருக்கிறார். முக்கியமான விஷயம் இந்த படத்தின் பெயர் பிகில்.

அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக 'விஜய் 63' உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் வில்லு படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். தெறி, மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரி வாசன் இந்த படத்திற்கும் வசனம் எழுதி வருகிறார். ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார்.  

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP