புதிய தோற்றத்தில் விஜய் ஆண்டனி!

காக்கி படத்தில் விஜய் ஆண்டனி சிக்ஸ் பேக்குடன் தோன்றும் காட்சிக்கான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் காக்கி படத்திற்கான படப்பிடிப்பு இன்று துவங்கியது.
 | 

புதிய தோற்றத்தில் விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி  நடிக்கும் "காக்கி" படத்திற்கான படப்பிடிப்பு இன்று துவங்கியது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக தன்னை தரம் உயர்த்தி கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் பிச்சைக்காரன், சைத்தான், எமன் போன்ற படங்களில் தனது மாறுபட்ட நடிப்பை பதிவு செய்தார். மேலும்  திமிரு பிடிச்சவன் படத்தில் போலீஸ் தோற்றத்தில் மிர‌ட்டி இருந்தார். இந்நிலையில் விஜய் ஆண்டனி காக்கி படத்தில்  நடிக்க உள்ளார்.  இந்த படத்தினை செந்தில்குமார் இயக்குகிறார். மேலும், இத்திரைப்படத்தில் சத்யராஜ், ஜெய் உள்ளிட்டோர் முக்கிய  வேடத்தில் நடிக்க உள்ளனர்.

புதிய தோற்றத்தில் விஜய் ஆண்டனி!

இந்நிலையில்  இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் விஜய் ஆண்டனி சிக்ஸ் பேக்குடன் தோன்றமளிக்கிறார்.  மேலும் காக்கி படத்திற்கான படப்பிடிப்பு இன்று துவங்கியது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP