சீதக்காதியில் அறிமுகமாகும் வைபவ் அண்ணன்!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கி வரும் சீதக்காதி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் வைபவின் அண்ணன் சுனில். பிஸினஸ் செய்துக் கொண்டிருந்த சுனிலுக்கு இதுவே முதல் படம்.
 | 

சீதக்காதியில் அறிமுகமாகும் வைபவ் அண்ணன்!

நடிகர் வைபவின் அண்ணன் சுனில் நடிப்புத் துறைக்கு அறிமுகமாகிறார். இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் சீதக்காதி திரைப்படத்தில் வில்லனாக அவர் நடித்திருக்கிறார். விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் எதிர்பார்ப்பை எகிற வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இயக்குநர் பாலாஜி தரணிதரன், "சுனிலை வில்லன் எனக் கூறுவதை விட கதைக்கு முக்கியமாகத் தேவைப்படும் 'கீ ரோல்' எனச் சொல்லலாம். அதில் நகைச்சுவை உணர்வும் கலந்து இருக்கும். படம் முடிந்ததும் மற்ற வில்லன் கதாபாத்திரங்களைப் போல், கோபமோ வன்மமோ சுனில் கதாபாத்திரத்தின் மேல் ரசிகர்களுக்கு வராது.

பிஸினஸ் செய்துக் கொண்டிருந்த சுனிலை சந்தித்த போது, அந்த கதாபாத்திரத்தை எப்படி வடிவமைத்திருந்தேனோ, அப்படியே இருந்தார். நிச்சயமாக அந்த ரோல் ரசிகர்களை கவரும்" என்கிறார்.

அதோடு "முதன் முதலில் அண்ணனால் பெருமை படும் தம்பி" என ட்விட்டரில் தன் அண்ணனை வாழ்த்தியிருக்கிறார் வைபவ்.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP