Logo

ஸ்லிம் ப்யூட்டி தமன்னாவின் பிட்னெஸ் ரகசியம் இது தான்!!

தமன்னா ஃபிட்னெஸ் சீக்ரெட் இது தான்!
 | 

ஸ்லிம் ப்யூட்டி தமன்னாவின் பிட்னெஸ் ரகசியம் இது தான்!!

கோலிவுட் மட்டுமல்லாமல் அக்கட தேசம், கடவுளின் தேசம், இந்தி வாலாக்கள் என்று கலந்து கட்டி இந்தியா முழுவதும் பரபரப்பாய் பறந்து பறந்து நடித்து தள்ளுகிறார் நடிகை தமன்னா. பாகுபலிக்கு பிறகு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருந்தாலும், தமிழில் தலைக்காட்ட தமன்னாவிற்கு நேரம் இன்னமும் கைகொடுக்கவில்லை. 

ஸ்லிம் ப்யூட்டி தமன்னாவின் பிட்னெஸ் ரகசியம் இது தான்!!
அக்கட பூமியில் கவனம் செலுத்திய நேரத்தில் சில தமிழ் பட வாய்ப்புகள் காற்றோடு போய்விட்ட வருத்தத்தில் இருக்கிறார். ஆனாலும் வருடங்களைக் கடந்தும் தமன்னாவிற்கு பட வாய்ப்புகள் எல்லா மொழிகளிலும் தொடர்ந்து வந்துக் கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவரது உடலை ஃபிட்டாக வைத்துக் கொண்டிருப்பது தான் என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்கிறார்.

ஸ்லிம் ப்யூட்டி தமன்னாவின் பிட்னெஸ் ரகசியம் இது தான்!!

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீச்சல், தினந்தோறும் உடற்பயிற்சி, யோகா என்று தமன்னாவின் ஃபிட்னெஸ் சார்ட் ரொம்ப பெருசு. தமிழ் சினிமாவில் 30 வயதைக் கடந்த பிறகும் ஒரு நடிகையால் இவ்வளவு ஃபிட்டாக இருக்க முடியும் என்று தன் இளமையையும், உடல் உறுதியையும் நிரூபித்து வருகிறார். 

ஸ்லிம் ப்யூட்டி தமன்னாவின் பிட்னெஸ் ரகசியம் இது தான்!!

30 வயதைக் கடந்தபிறகும் தமன்னா சிக்கென்று இருப்பதற்கு அவருடைய உணவுக் கட்டுப்பாடும் முக்கிய காரணம். 
அதிகாலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்துக் குடிப்பார். அதன்பிறகு நீரில் ஊற வைத்த 6 பாதாமை உண்பார். காலை உணவுகளில் கார்போஹைட்ரேட் உணவுகளை விரும்பி உண்பார். இட்லி, தோசை  அல்லது ஓட்ஸ் ஆகியவை தான் தமன்னாவின் பிராதான காலை உணவு. 

ஸ்லிம் ப்யூட்டி தமன்னாவின் பிட்னெஸ் ரகசியம் இது தான்!!

மதியம் ஒரு கப் சாதம், தால், ஏதாவது ஒரு காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்வார்.  சாதத்திற்கு வெள்ளை மற்றும் பழுப்பு அரிசிகளை பயன்படுத்துவார். தமன்னாவின் இரவு உணவில் புரோட்டின் அதிக அளவில் இருக்கும். உதாரணமாக முட்டை வெள்ளைக் கரு, சிக்கன் என்று நீள்கிறது லிஸ்ட். 

ஸ்லிம் ப்யூட்டி தமன்னாவின் பிட்னெஸ் ரகசியம் இது தான்!!

தினமும் குறைந்தது 4 முதல் 6 லிட்டர் தண்ணீர் வரையில் குடிப்பார். இனிப்பு நிறைந்த உணவுகளை  தமன்னா தவிர்த்து விடுவார். பழச்சாறுகள், பிஸ்தா, சாக்கலேட் உள்ளிட்டவற்றை மிதமாக உண்பார்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP