ஊழியர்கள் ஸ்டிரைக்: பிக்பாஸ் 2 படப்பிடிப்பு நிறுத்தம்?

பிக்பாஸ்- 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஊழியர்கள் ஸ்டிரைக்: பிக்பாஸ் 2 படப்பிடிப்பு நிறுத்தம்?

கலாச்சார சீரழிவு, அனுமதி என்று பல்வேறு பிரச்னைகளை சமாளித்து வரும் பிக்பாஸ்-2க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க பெப்சி தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். தொலைக்காட்சி நிகழ்ச்சியிலே அதிக விளம்பர வசூலை அள்ளிய ஷோ என்று சொல்லலாம். வித்தியாசமான கான்ஸப்டினால், புதுமையான ஷோ என்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக கமல் தொகுத்து வழங்கியதும் அதற்கு முக்கியமான காரணம். 

பிக்பாஸ்-1 ல் ஆரவ்- ஓவியா க்யூட் லவ் ஸ்டோரியும், ஆரவ் மருத்துவ முத்தமும், ஜூலியின் தில்லாலங்கடி சேட்டையும், காயத்ரியின் அட்வைசும், ஸ்நேகனின் கட்டிப்பிடி வைத்தியமும் யாராலும் மறக்க முடியாத காட்சிகள்!. இப்படி பல சுவாரஸ்யங்களை கடந்து கடைசியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து இந்த வருடமும் சீசன் 2 தொடங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் - 2வையும் கமல் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்கள் வீட்டினுள் களமிறக்கப்பட்டுள்ளனர். அடிதடி, மோதல், சண்டை, கொண்டாட்டங்கள், ஆடல், பாடல், சமையல், கோபம் என விறுவிறுப்பாக பிக் பாஸ் -2 ம் எதிர்பார்த்தைவிட விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதற்காக சென்னை பூந்தமல்லி சாலையில் பலகோடி மதிப்பிலான செட் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் நடவடிக்கைகளை கவனிக்க இம்முறை 60 கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை கேமரா, லைட்டிங் உள்ளிட்ட பின்னணி வேலைகளை சினிமா தொழிலாளர்கள் யூனியனான பெப்ஸியைச் சேர்ந்தவர்களே செய்து வருகின்றனர். தற்போது ஊதியம் உள்ளிட்டவற்றில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெப்ஸி செயலாளர் சண்முகத்தின் அறிவுரைப்படி ஊழியர்கள் திடிரென வேலைக்கு வரமாட்டோம் என தெரிவித்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இதையடுத்து பிக்பாஸ் 2 நிறுத்தப்படுவதைத் தடுக்க பெப்ஸி அமைப்புடன் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP