'சைரா நரசிம்ம ரெட்டி' விற்பனையால் இன்ப அதிர்ச்சியடைந்துள்ள படக்குழுவினர்! 

படத்தின் அனைத்து மொழி சாட்டிலைட் உரிமையும் ரூ.125 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனராம்.
 | 

 'சைரா நரசிம்ம ரெட்டி' விற்பனையால் இன்ப அதிர்ச்சியடைந்துள்ள படக்குழுவினர்! 

ஆந்திரா மாநிலம் கர்ணூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 'சைரா நரசிம்ம ரெட்டி' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் கதாப்பாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், இவர்களுடன் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு  இளையராஜா இசையமைதுள்ளார் .  

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட  ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள  இந்த படத்தை  பிரமாண்ட பொருட்செலவில்  சிரஞ்சிவியின் மகனும் நடிகருமான  ராம் சரண் தயாரித்துள்ளார்.  வரும் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வரவுள்ள  இதனை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளனர். அதோடு தெலுங்கில் இந்த படத்தின் தியேட்டர் உரிமை ரூ.140 கோடிக்கு விற்பனையானதாக தெரியவந்துள்ளது.

மேலும்  படத்தின் அனைத்து மொழி சாட்டிலைட் உரிமையும் ரூ.125 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனராம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP