#Metoo இயக்கம்: வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை நாடிய பாடகி சின்மயி
தன்னிடம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தவறாக நடந்து கொள்ள பாடலாசிரியர் வைரமுத்து முயற்சித்தாக தான் அளித்த புகாருக்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பாடகி சின்மயி ட்விட்டர் மூலம் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார்.
உலகளவில் வீசிய மீடூ அலை கடந்தாண்டு இந்தியாவுக்கும் வந்தது. இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பல பிரபலங்களின் பெயர்கள் குற்றம் புரிந்தவர்கள் பட்டியலில் என வெளியானது. (அதில் பல பெயர் கூற விரும்பாதவர்களின் குற்றச்சாட்டுகளாகவே இருந்தன.)
குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வைத்த குற்றச்சாட்டு தமிழ் திரையுலகத்தையே உலுக்கியது. அவரைத் தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க சின்மயியிடம் போதிய ஆதராங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த பிரச்னையை சின்மயி வேறு வழியில் சந்திக்க தொடங்கியிருக்கிறார். அவர் ட்விட்டர் பக்கம் மூலம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காத்தியை டெக் செய்து, "வைரமுத்து மீது நான் புகார் அளித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு தமிழ் சினிமா துறையிலிருந்து நான் விலக்கப்பட்டுள்ளேன். வழக்கு பதிவு செய்வதற்கு இன்றைய சட்டம் எனக்கு அனுமதியளிப்பதில்லை. எனக்கு ஒரு தீர்வளியுங்கள்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
I have taken up your case with @NCWIndia. Kindly DM your contact details. @Chinmayi @sharmarekha https://t.co/louSvb4Ge6
— Maneka Gandhi (@Manekagandhibjp) February 27, 2019
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ள மேனாக காந்தி, "இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்திடம் எடுத்துச் சென்றுள்ளேன். உங்களது விவரங்களை மெசேஜ் அனுப்பவும்" என்று தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in