சர்ச்சைகளை புறம் தள்ளி மீண்டும் சீதையாகும் நயன்தாரா?

1,500 கோடி செலவில் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்க உள்ள ராமாயண காவியத்தில் சீதையாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் பரவி வருகிறது.
 | 

சர்ச்சைகளை புறம் தள்ளி மீண்டும் சீதையாகும் நயன்தாரா?

கடந்த 2011 ம் ஆண்டு வெளியான 'ஸ்ரீராம ராஜ்ஜியம் 'என்னும் புராண கதையில் பிரபல நடிகை நயன்தாரா சீதை வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் உருவாவதற்கு முன்னரே சீதையாக நயன்தாரா நடிப்பதற்கு பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.  

இந்த எதிர்ப்புக்கு, பிரபு தேவா - நயன்தாரா இடையேயான காதல்,காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் எதிர்ப்பையும் கடந்து நயன்தாரா 'ஸ்ரீராம ராஜ்ஜியம் 'படத்தில் சீதையாக நடித்திருந்தார்.  

இது குறித்து சமீபத்தில் கூட நடிகர் ராதாரவி சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். 

இந்நிலையில் 1,500 கோடி செலவில் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்க உள்ள ராமாயண காவியத்தில் சீதையாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் பரவி வருகிறது.

இந்த படத்தை பிரபல இயக்குனர்களான நிதிஷ் திவாரி மற்றும் ரவி உத்யவார் இணைந்து இயக்க உள்ளனராம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP