இயக்குனரை மணக்கும் நயன்தாரா? 

வரும் டிசம்பர் மாதம் நயன்தாரா - விக்னேஷ்சிவன் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
 | 

இயக்குனரை மணக்கும் நயன்தாரா? 

பிரபல  நடிகை நயன்தாரா உச்ச நட்சத்திரமாக இருந்துவருகிறார். தனக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன் தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதனை  உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் உள்ளூர் முதல் வெளி நாடுகள் வரை ஜோடியாக வலம் வருவதும், அது தொடர்பான புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருக்கின்றனர். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் நயன்தாரா - விக்னேஷ்சிவன் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP