'செக்கச் சிவந்த வானம்' செம போதை!: கௌதம் மேனன்

மணிரத்னம் இயக்கியுள்ள மல்டி-ஸ்டாரர் படமான ‘செக்க சிவந்த வானம்’ படத்தை, ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் படகுழுவினரை பாராட்டியுள்ளார்.
 | 

'செக்கச் சிவந்த வானம்' செம போதை!: கௌதம் மேனன்

மணிரத்னம் இயக்கியுள்ள மல்டி-ஸ்டாரர் படமான ‘செக்க சிவந்த வானம்’ படத்தை, ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் படகுழுவினரை பாராட்டியுள்ளார். தற்போது இவர் என்னை நோக்கி பாயும் தோட்டா பட வேலைகளில் பிஸியாக உள்ளார்.

பிரபல இயக்குநர் மணிரத்னம், தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ‘செக்க சிவந்த வானம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் பிரகாஷ் ராஜ், தியாகராஜன் நடிகைகள் அதிதி ராவ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெயசுதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

தமிழில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியாகும் மல்டி ஸ்டாரர் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் மட்டுமின்றி இந்த முறை திரையுலக பிரபலங்களும் ஆர்வம் காட்டி வந்தனர். இதை தொடர்ந்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் படத்தின் முதல் கட்சியை பார்த்த பிறகு ட்வீட் செய்துள்ளார்.

"மணி சார், மற்றும் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மானின் இசையும் கதைக்கு நன்கு பொருந்தியுள்ளது. ஆகமொத்தத்தில் 'செக்க சிவந்த வானம்' செம போதை!" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்  கவுதம் வாசுதேவ் மேனன். இதை தொடர்ந்து பல முக்கிய பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP