பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 79.
 | 

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

சிறுநீரக கோளாறு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மகேந்திரன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த  நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 79. இத்தகவலை அவரது மகன் ஜான் மகேந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 நடிகராகவும், அவதாரம் எடுத்த மகேந்திரன், விஜய் நடித்த ’தெறி’, ரஜினியின் ’பேட்ட’, நிமிர், பூமராங் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் யதார்த்த சினிமாவுக்கு சொந்தக்காரரான இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு ஏராளமான திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள மகேந்திரன் இல்லத்தில், அவரது உடல் திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக காலை 10 மணிக்கு வைக்கப்படுகிறது. ரஜினிகாந்த் நேரில் வந்து மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு  அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP