மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது: முருகதாஸ் திட்டவட்டம்

சர்கார் பட விவகாரத்தில் தமிழக அரசிடம் மன்னிப்பும் கோர முடியாது, வரும் காலத்தில் அரசை விமா்சிக்க மாட்டேன் என்றும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் திட்டவட்டமாக பதில் அளித்துள்ளாா்.
 | 

மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது: முருகதாஸ் திட்டவட்டம்

சர்கார் பட விவகாரத்தில் தமிழக அரசிடம் மன்னிப்பும் கோர முடியாது, வரும் காலத்தில் அரசை விமா்சிக்க மாட்டேன் என்றும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் திட்டவட்டமாக பதில் அளித்துள்ளாா்.

விஜய் நடித்திருந்த சர்கார் படத்தில் தமிழக அரசு, அரசின் நலத்திட்டங்கள் சா்ச்சைக்குரிய வகையில் விமா்சிக்கப்பட்டுள்ளதாக அப்படத்திற்கு எதிராக அ.தி.மு.க.வினா், தமிழக அமைச்சா்கள் பகிரங்கமாக எதிா்ப்பு தொிவித்தனா். தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன்பு நடைபெற்ற போராட்டங்களைத் தொடா்ந்து படத்தில் இடம்பெற்றிருந்த சா்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது. பின்னா் மறுதணிக்கை செய்யப்பட்டு படம் வெளியானது. 

இதனைத் தொடா்ந்து படத்தின் இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழலில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றாா். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு தரப்பில் கடும் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டது. இது தொடா்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் நலத்திட்டங்களையும், தமிழக அரசையும் விமா்சித்த இயக்குநா் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். வரும் காலத்தில் அரசையும், அரசின் நலத்திட்டங்களையும் விமா்சிக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில், இயக்குநா் முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா், தமிழக அரசு, அரசின் நலத்திட்டங்களை விமா்சித்ததற்காக மன்னிப்பு கோரும் பட்சத்தில் அது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒன்றாகிவிடும். எனவே தமிழக அரசிடம் மன்னிப்பும் கோர இயலாது, அரசையும், அரசின் நலத்திட்டங்களையும் விமா்சிக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரமும் தாக்கல் செய்ய இயலாது என்று திட்டவட்டமாக தொிவிக்கப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP