பிக் பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணின் பிறந்த நாள் இன்று!

பிக் பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண் சென்னையில் இதே நாளில் (பிறப்பு: 29 ஜூன், 1990) பிறந்தவர். பிக் பாஸ் ஷோவிற்கு வருவதற்கு முன்னரே ஹரீஷ், சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 | 

பிக் பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணின் பிறந்த நாள் இன்று!

பிக் பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண் சென்னையில் இதே நாளில் (பிறப்பு: 29 ஜூன், 1990) பிறந்தவர். பிக் பாஸ் சோவிற்கு வருவதற்கு முன்னரே ஹரீஷ், சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் பிக் பாஸ் என்னும் ரியாலிட்டி ஷோ உண்மையிலேயே இவரது வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது என்றே சொல்லலாம். சினிமா வாழ்க்கையில் கிடைக்காத முகவரியை பிக் பாஸ் ஷோ ஹரீஷுக்கு பெற்று கொடுத்தது.

 பிக்பாஸ் ஷோவிலிருந்து  ரன்னராக வெளியே வந்த இவருக்கு மிக பெரிய வாய்ப்பு காத்திருந்தது. பிக் பாஸ்க்கு பிறகு இவரது முதல் படமாக ’பியார் பிரேமா காதல்’  அமைந்தது.  யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் மிக அருமையான காதல் கதையில் ஹரீஷ் நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்ததுடன், ’ரோமாண்டிக் ஹீரோ ஆப் தி இயர்’ என்னும் விருதையும் அவருக்கு பெற்றுக்கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கௌதம் இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜெர்ஸி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஹரீஷ் தற்போது தனுசு ராசி நேயர்களே, கசடதபற, தாராள பிரபு, சசியுடன் ஒரு படம் என மிக பரபரப்பான நடிகராக மாறிவிட்டார். குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான  ஹரீஷ் கல்யாணுக்கு இன்று(29ஜூன்) பிறந்த நாள். அவரை நாம் வாழ்த்துவோம் நண்பர்களே!

 newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP