ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி கேட்டு அர்ஜுன் அவதூறு வழக்கு!

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டு கூறி தனது நற்பெயருக்கு கலங்கும் ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார் என்று ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் அர்ஜூன் சார்ஜா மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 | 

ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி கேட்டு அர்ஜுன் அவதூறு வழக்கு!

தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் பொய்யானது என்று கூறி நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி கோட்டு அர்ஜூன் மன நஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார்.

மீடூ என்ற ஹேஷ்டேக்கின் மூலம் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தாக்குதல்கள் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்த பலர் குறிப்பிடும் பெயர்பள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

சமீபத்தில் நடிகர் அர்ஜூன் மீது நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன் போன்ற படங்களில் நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு கூறினார்.

அவர் இதுகுறித்து பதிவில், நிபுணன் படத்தின் படப்பிடிப்பில் அர்ஜூனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது மகிழ்ச்சி அடைந்தேன். எங்களுக்கு இடையே ரொமான்டிக் காட்சி படமாக்கப்பட்டது. அதற்கான ஒத்திகையின் போது, நாங்கள் எங்கள் வசனங்களை பேசிப் பார்த்தோம். அர்ஜூன் அப்போது வரம்புமீறி நடந்து கொண்டார். இப்படி ஒரு காட்சி இருக்கிறதா என்று அப்போதே நான் இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் அதற்கு அவரிடம் பதில் இல்லை. சினிமாவில் இது எல்லாம் சாதாரணம் தான் என்று உணர்ந்தேன். என் நிலையை இயக்குநரும் உணர்ந்திருந்தார். நடந்ததை நான் வேறு யாரிடமும் கூறவில்லை. மேக் அப் அறையில் இருந்தவர்களிடம் மட்டும் கூறினேன்" என்றார். 

ஸ்ருதியின் இந்த குற்றச்சாட்டுக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் அவரை கர்நாடக திரைப்பட சங்கத்தில் இருந்து தடை செய்ய வேண்டும் என்றும் சிலர் போராட்டம் நடத்தினர். பின்னர் அர்ஜூனின் மாமனாரான ராஜேஷ் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் ஸ்ருதி மீது புகார் செய்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அர்ஜூன் மற்றும் ஸ்ருதி இடையே சந்திப்பை உருவாக்கி அதன் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்தது. அதன்படி கூட்டம் நேற்று நடந்தது. 

இந்த கூட்டத்தில் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் சமரச தீர்வை ஏற்க இருவருமே மறுத்துவிட்டனர். இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று சபை நிர்வாகிகள் கூறினர். 

இந்நிலையில் இத்தனை வருடங்கள் சினிமாவில் வாங்கிய நற்பெயரை கெடுக்கும் வகையில் ஸ்ருதி பொய்யான புகாரை கூறிவிட்டார் என  அர்ஜூன் ரூ. 5 கோடி நஷ்டஈடு  கேட்ட மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP