பரியேறும் பெருமாளுக்கு மேலும் ஓர் விருது!

இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் சிறந்த முழுநீள திரைப்படத்திற்கான விருதை, பா.ரஞ்சித் தயாரித்து, மாரி செல்வராஜ் இயக்கிய 'பரியேறும் பெருமாள்' படத்திற்கு சென்னை சர்வதேச பட விழாவில் விருது கிடைத்துள்ளது.
 | 

பரியேறும் பெருமாளுக்கு மேலும் ஓர் விருது!

இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்கு ஓர் முக்கிய இடமுண்டு. 

கடந்த செப்டம்பரில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இயக்குநர்கள் ராம் மற்றும் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மாரி செல்வராஜ் இதனை இயக்கியிருந்தார். 

இந்தத் திரைப்படத்தில் கதிர், ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். சாதிய கொடுமைகளை திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. 

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். 

இந்நிலையில் சென்னை சர்வதேச பட விழாவில் பரியேரும் பெருமாளுக்கு சிறந்த முழுநீள திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது. இதற்காக ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜுக்கு விருது வழங்கி கெளரவித்திருக்கிறது பட விழா குழு.  
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP