மீண்டும் சாட்டையை சுழற்றும் சமுத்திரக்கனி

அன்பழகன் இயக்கத்தில் ’அடுத்த சாட்டை’ என்னும் பெயரில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கிஷோர், சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, அதுல்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலரை நாளை வெளியிட உள்ளதாக சமுத்திரக்கனி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

மீண்டும் சாட்டையை சுழற்றும் சமுத்திரக்கனி

சமூக பிரச்னைகளை ஆணித்தனமாக எடுத்து சொல்லும் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் சமுத்திரக்கனி. இவர் நடிப்பில் வெளிவந்த சாட்டை மாணவர்களின் பிரச்னை குறித்த புரிதலாக அமைந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து சாட்டை2 எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி  அன்பழகன் இயக்கத்தில் ’அடுத்த சாட்டை’ என்னும் பெயரில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில்  கிஷோர், சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, அதுல்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் தயாரிப்பாளர் பிரபு திலக் மற்றும் சமுத்திரக்கனி இணைந்து இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளனர். இதற்கிடையே, 'அடுத்த சாட்டை' படத்தின் ட்ரைலரை நாளை நடிகர் சூர்யா வெளியிடுவார் என, சமுத்திரக்கனி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP