டிக் டிக் டிக் - திரை விமர்சனம்

'டிக் டிக் டிக்' இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரைப்படம் என்ற விளம்பரத்தோடு வெளியாகியிருக்கும் படம். ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விண்வெளி அட்வெஞ்சர் படம்.
 | 

டிக் டிக் டிக் - திரை விமர்சனம்

'டிக் டிக் டிக்' இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரைப்படம் என்ற விளம்பரத்தோடு வெளியாகியிருக்கும் படம். ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விண்வெளி அட்வெஞ்சர் படம். 

படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போதே, தெரிந்திருக்கும் இது ஹாலிவுட் படங்களில் இருந்து உருவப்பட்ட ஒரு கலவை தான் என்று. மையக் கதை, ஆர்மகெடான், டீப் இம்பாக்ட் போன்ற ஹாலிவுட் படங்களில் இருந்து எடுக்கப்பட்டது.

மிகப்பெரிய ஒரு விண்கல், பூமியில் வந்து விழப்போகிறது. பூமியை நெருங்கும் முன், நம்ம ஹீரோக்கள் அதை அணுகுண்டு வைத்து தகர்க்க வேண்டும். இதற்கு இடையே, அணுகுண்டை திருடுவது, ஜெயம் ரவியின் அப்பா மகன் சென்டிமெண்ட், விண்வெளி பயணத்தில் ஏற்படும் பிரச்னைகள், இந்த திட்டத்தை தடுக்க முயலும் வில்லன் என புதிதாக சில மேட்டர்களையும் சேர்த்துள்ளார் இயக்குநர்.

படத்தின் ப்ளஸ் பாயிண்ட்: புதுசா ஏதோ ட்ரை பண்ணிருக்காங்க பாஸ்; பல இடங்களில் கிராபிக்ஸ் சிறப்பு!

படத்தின் மைனஸ் பாயிண்ட்: இயற்பியல், பிசிக்ஸ், லாஜிக் என எப்படி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம். 

ஓப்பனிங் சீனில் 8 சதுர அடி கொண்ட ஒரு விண்கல் பூமியில் விழுகிறது. அதன் பின், இதைவிட பெரிய கல் வரப்போகிறது என்கிறார்கள். வந்து விழப்போகும் விண்கல்லின் அளவு "60 கிமீ சதுர அடி" என்பது படத்தில் சொல்லப்படும் ஒரு வசனம். இதிலேயே தெரிந்து விடுகிறது லாஜிக் மீது எந்த அளவுக்கு கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்று.

மெஜிஷியன், மெகா திருடன், வித்தைக்காரன், அவனால் புகுற முடியாத இடமும் இல்லை, தப்பிக்க முடியாத இடமும் இல்லை, என ஜெயம் ரவியை பயங்கர பில்ட் அப் கொடுத்து அறிமுகம் செய்கிறார்கள் படத்தின் காவல்துறையினர். ஆனால், அவர் செய்த ஒரே குற்றம், ஒரு நல்ல காரியத்திற்காக போலீஸ் லாக்கரில் இருந்து எவிடென்சை திருடியது மட்டும் தான். 

இந்த ஏனோதானோ திருடனுக்கு ட்ரெயினிங் கொடுத்து, அவரை விண்ணுக்கு அழைத்து சென்று, சீன விண்வெளி நிலையத்தில் இருந்து ஒரு மெகா அணு ஆயுத ஏவுகணையை திருடி, அதை வைத்து விண்கல்லை தகர்க்க வேண்டும்.

விண்ணில் செல்லும்போது ஒரு பிரச்னை ஏற்பட்டுகிறது. அதை தொடர்ந்து விண்வெளி ஓடம் நிலவில் விழுகிறது. அதற்கு 6 மணி நேரத்தில் உதவி வரும் என்றும் கூறுகிறார்கள். நிலவு எத்தனை 'கிமீ சதுர அடி' தொலைவில் இருக்கிறது என இயக்குனருக்கு தெரியுமோ என்னவோ. அதன் பிறகு, டேமேஜான ஓடத்தை ரொம்ப சாதாரணமாக அங்கிருந்து டேக் ஆப் செய்கிறார்கள்.

இப்படி லாஜிக்கே இல்லாமல் நகர்ந்தாலும், படம் கொஞ்சம் விறுவிறுப்பாக செல்வது மிகப்பெரிய ப்ளஸ். ஆனால், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கதையில் வேகமும் இல்லை. அங்கங்கே படத்தின் நீளத்தை குறைக்க கத்தரி போட்டிருக்கிறார்கள். அது கதையையும் குளறுபடி செய்கிறது. இருந்தாலும், ஹீரோயின் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக படத்தில் ஒரு ரொமான்டிக் ஆங்கிள் போடாத இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ஜெயம் ரவியின் ஆக்டிங் படத்திற்க்கு ஒரு ப்ளஸ். ஜெயபிரகாஷ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் எல்லாம் ஆவன செய்திருக்கிறார்கள். ஆனால், ரொம்ப ரொம்ப சிம்பிளான விஷயங்களை கூட ஆய்வு செய்யாமல் 'ஸ்பேஸ்' படம் எடுத்துவிட்டு, நம்மை லாஜிக் எல்லாம் பார்க்காதீர்கள், என சொல்வது கொஞ்சம் எரிச்சலாக உள்ளது.

சில இடங்களில் கிராபிக்ஸ் மோசமாக இருந்தாலும், பல இடங்களில் பிரம்மிக்க வைக்கிறது. மற்ற விஷயங்களில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் திரைக்கதையில் செலுத்தியிருந்தால் படம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். பொழுதுபோகிற்காக செல்பவர்களுக்கு படம் டிக் டிக் டிக். ஆனால், ஹாலிவுட் படம் பார்ப்பவர், லாஜிக் பார்ப்பவர் நீங்கள் என்றால் உங்களுக்கு இந்த படம் டைம் பாம்.

டிக் டிக் டிக் - 2.5/5

டிக் டிக் டிக் படம் பற்றி ஆடியன்ஸ் என்ன நினைக்கிறார்கள் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்...

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP