Logo

நோட்டா - திரை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன், யாஷிகா ஆகியோர் நடித்து வெளியாகியுள்ள பொலிட்டிக்கல் திரைப்படம் 'நோட்டா'.
 | 

நோட்டா - திரை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன், யாஷிகா ஆகியோர் நடித்து வெளியாகியுள்ள பொலிட்டிக்கல் திரைப்படம் 'நோட்டா'.

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர், இந்த படத்தின் மூலம் மீண்டும் திரும்பியுள்ளார். சாம்.சி.எஸ் இசையமைக்க, சந்தான கிருஷ்ண ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா, இந்த படத்தை தயாரித்துள்ளார். 

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்தமுறை, முதலமைச்சர் அவதாரம் எடுத்துள்ளார். ஊழல்வாதி முதலமைச்சரின் மகனாக தோன்றுகிறார் விஜய் தேவரகொண்டா. வழக்கமான தமிழ் சினிமாவில் வரும் பணக்கார அமைச்சரின் மகன் போல முதல் காட்சியில் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கிறார். ஆனால், காட்சிகள் நகர நகர, அவருடைய கதாபாத்திரத்தின் ஆழம் தெரிகிறது. 

நோட்டா - திரை விமர்சனம்

ஒரு வழக்கால், தனது பதவிக்கு ஆபத்து வரும் வேளையில், வெளிநாட்டில் சுற்றித்திரியும் தனது மகனை, முதலமைச்சர் பதவியில் உட்கார வைக்கிறார் நாசர். முதலில் வெள்ளந்தியாக இருக்கும் விஜய், தான் எடுக்கும், எடுக்காமல் விடும், சிறு சிறு முடிவுகளின் மோசமான விளைவுகளை கண்ணால் பார்த்தபின், புதுமனிதனாக களத்தில் இறங்குகிறார். அவருக்கு எழும் சவால்கள் என்னென்னெ, எதிர்க்கட்சி முதல் உடன் இருப்பவர்கள் வரை, உள்ள அத்தனை எதிரிகளையும் எப்படி சமாளிக்கிறார் என்பதே மீதி கதை. 

படத்தின் முதல் பாதியில், அரசியலே வேண்டாம் என ஒதுங்கி நிற்கும் போதும், பின்னர் முதல்வராக அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் போதும், கேரக்டருக்கு ஏற்ற மாற்றங்களை கண்களில் காட்டுகிறார் விஜய். முழு படத்தின் பாரமும் தனது தோள்களில் விழுந்தாலும், அதை எளிதாக தாங்கி, இறுதி கோடு வரை கொண்டு சென்றுள்ளார். விஜய்க்கு அடுத்து படத்தில் இரண்டாவது  பெரிய கேரக்டர் சத்யராஜ். பாகுபலியின் கட்டப்பாவை போல இதிலும் தனக்கு கிடைத்த ஆழமான ரோலை கொண்டு சிக்ஸர் அடித்துள்ளார். நாசர், சஞ்சனா நடராஜன் ஆகியோரின் நடிப்பும் சிறப்பு. 

சாம் சி.எஸ்-சின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கிறது. படத்தின் வேகத்தை பாடல்கள் மூலம் குறுக்கிடாமல் சென்றது பாராட்ட வேண்டிய விஷயம். சந்தான கிருஷ்ண ரவிச்சந்திரனின் கேமரா வேலைகளும் சிறப்பு. 

நோட்டா - திரை விமர்சனம்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் அரசியல் சொதப்பல்கள் அனைத்தையும் படத்தில் காட்டி கலாய்க்க முயற்சி செய்துள்ளார்கள். கூவத்தூர் துவங்கி, அப்போலோ வரை எதையுமே விட்டுவைக்கவில்லை. இது ஓரளவுக்கு ஒர்கவுட் ஆனாலும், இதுபோன்ற காட்சிகளில் காமெடி இல்லாததால், சப்பென தெரிகிறது. சீரியஸான படம் என்ற கேட்டகரியிலும் இதை சேர்த்துவிட முடியாது. ஒரு சில காட்சிகளை தவிர படம் எமோஷனலாகவும் மனதில் நிற்கவில்லை.

நிஜ அரசியல் சம்பவங்களை நம்பியே முழு திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில சம்பவங்கள் படத்தின் கதையில் சேராமல் தனித்தனி காமெடி டிராக் போல இருப்பது மைனஸ். ஒரு சில இடங்களை தவிர வசனங்களும் பெரிதாக ஈர்க்கவில்லை. விஜய் தேவரகொண்டா ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் விருந்து. மற்றபடி, எதிர்பார்த்த அளவு இல்லை. ஆனால், சலிப்பு ஏற்படாமல் செல்வதாலும், அரசியல்வாதிகளை 'வெச்சு செஞ்சிருப்பதாலும்', நோட்டா நிச்சயம் ஒரு நல்ல ஒன் டைம் வாட்ச்.

நம்ம ரேட்டிங் - 2.5/5

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP