இணையத்தில் ரிலீஸான கார்த்தியின் தம்பி! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

தமிழ்ராக்கர்ஸில் வெளியான தம்பி! அதிர்ச்சியில் உறைந்த கார்த்தி!
 | 

இணையத்தில் ரிலீஸான கார்த்தியின் தம்பி! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

நடிகர் கார்த்தி நடித்துள்ள தம்பி திரைப்படம் திரையரங்குகளில் வெளியான சில மணிநேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸில் வெளியானதால் படக்குழுவினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இணையத்தில் ரிலீஸான கார்த்தியின் தம்பி! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், சவுகார் ஜானகி, நிகிலா போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகி இன்று காலை திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தம்பி.  த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இந்தப் படத்தை இயக்கிவுள்ளார். திரையரங்குகளில் திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், படம் அருமையாக இருக்கிறது என்றும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் என்றும்  சமூக வலைதளங்களில் தங்களுடைய ரேட்டிங்கை பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர். வந்தனர். இதனால் தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

இணையத்தில் ரிலீஸான கார்த்தியின் தம்பி! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!
ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள் கூட  நீடிக்கவில்லை. திரையரங்கில் படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் வெப்சைட்டில் தம்பி படம் வெளியாகி விட்டது.  சனி ஞாயிறு விடுமுறை நாட்களை நம்பித் தான் திரைப்படத்தின் வசூலே இருக்கிறது. அதற்கு முன்னரே, திரையரங்குகளில் ரிலீஸான அன்றே ராக்கர்ஸிலும் வெளியானதால் விடுமுறை நாட்களில் படத்திற்கு போகலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்களை வரவிடாமல் தடுப்பதாக அமைந்து விடும். 

இணையத்தில் ரிலீஸான கார்த்தியின் தம்பி! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

தமிழ் ராக்கர்ஸில் வெளியானதால் படத்தின் வசூல் பெருமளவுக்கு பாதிக்கப்படும் என்பதால் தயாரிப்பு நிறுவனம் சோகத்தில் மூழ்கியுள்ளது. எத்தனை முறை தமிழ் ராக்கர்சின் வெப்சைட் முடக்கப்பட்டாலும், புதிய வெப்சைட்டில் வந்து திருட்டுத் தனமாக திரைப்படங்களை வெளியிட்டு காவல்துறையினர் கண்களிலும் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் ரிலீஸான கார்த்தியின் தம்பி! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

நடிகர் சங்கத்தின் பொறுப்புகளுக்கு வந்த பிறகு, பிற நடிகர்களின் படங்களை விட நடிகர் கார்த்தி, விஷால் படங்களை குறி வைத்து, சுட சுட தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படங்களை வெளியாவதைத் தடுக்காத வரையில் தமிழ் சினிமாவின் வசூல் ராஜ்ஜியம் கேள்விகுறியாக தான் இருக்கும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP