ஹீரோ திரை விமர்சனம்! HERO வா ஜெயிச்சாரா சிவகார்த்திகேயன்?

ஹீரோ விமர்சனம்! சிவா ஜெயிச்சுட்டார்!
 | 

ஹீரோ திரை விமர்சனம்! HERO வா ஜெயிச்சாரா சிவகார்த்திகேயன்?

பள்ளியில் படிக்கும் போதே சூப்பர் ஹீரோவைப் போல நாமும் ஆக வேண்டும் என்று கனவுகளை சுமக்கும் சக்தி (சிவகார்த்திகேயன்). நன்றாக படித்தும், தன்னுடைய சான்றிதழ்களை விற்க நேரிடுகிறது. அதன் பின் போலி சான்றிதழ்களைத் தயாரித்து கொடுத்து லட்சங்களில் சம்பாதிக்கிறார் சக்தி.

ஹீரோ திரை விமர்சனம்! HERO வா ஜெயிச்சாரா சிவகார்த்திகேயன்?

இன்னொரு பக்கம், வகுப்பில் ஃபெயிலான மாணவர்களிடம் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வருகிறார் சத்யமூர்த்தி (அர்ஜூன்).  அதில் ஒரு மாணவியான இவானாவின் கனவை நிறைவேற்ற துடிக்கிறார் சக்தி. வில்லன்களின் சதியால் தற்கொலை செய்துக் கொள்ளும் இவானா, அர்ஜூன் மறைந்து வாழும் மர்மம், அதன் பின்னர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக மாறி செய்யும் சாகசங்கள்  என்பது மீதி கதை.

ஹீரோ திரை விமர்சனம்! HERO வா ஜெயிச்சாரா சிவகார்த்திகேயன்?

சமூக கருத்தோடு கூடிய படம் என்பது மாஸ் ஹீரோவுக்கு கத்தி மேல் நடப்பது மாதிரி. ஒவ்வொரு முறையும் சிவா அப்படியான கதைகளில் திறம்பட செய்கிறார். இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு அது வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது. ஆனால், சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோவாக காட்டும் காட்சிகள் எடுபடவில்லை. படத்தில் ஹீரோயின் கல்யாணிக்கு பெரிய ரோல் கிடையாது என்றாலும் பாந்தமான அறிமுகம். படத்தின் பின்பகுதி முழுக்கவே லாஜிக் மீறல்கள் நெளிய வைக்கிறது. முதல் பாதியில் ‘ஜெண்டில்மேன்’ படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் என்று ரசிகர்கள் தியேட்டரில் கலாய்த்தாலும், சரியான நேரத்தில், ‘இனி ஜெண்டில்மேன் தேவையில்லை, ஹீரோ வேண்டும்’ என்று அர்ஜூன் பேசும் வசனம் தியேட்டரை குலுங்க செய்கிறது. ‘இந்தியாவில் மட்டும் தான் தன் கனவுகளை பெற்றோர்களிடம் சொல்லவே பிள்ளைகள் அஞ்சுகிறார்கள்’ போன்ற வசனங்களில்  இயக்குநர் மித்ரன் சபாஷ் வாங்குகிறார்.  பாடல்களில் மொத்தமாக கோட்டை விட்டிருக்கிறார்கள். 

ஹீரோ திரை விமர்சனம்! HERO வா ஜெயிச்சாரா சிவகார்த்திகேயன்?

ஆனாலும் படத்தின் ஆகப் பெரும் பலம் யுவன் இசை. ஜார்ஜ் ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங். மொத்த படத்தையும் இந்த மூன்றுமே தூக்கிப் பிடிக்கிறது. ஹீரோ... தமிழ் சினிமாவில் வெற்றி பெறும் முதல் சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருப்பார் என்று தாராளமாக நம்பலாம்!
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP